கடலூர் :
கடலூர் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி பெற விரும்பும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கடலூர் அரசு சேவை இல்ல மேல் நிலைப் பள்ளியில் 2010-11ம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ், நர்சிங் பாடப்பிரிவு, தையல் மற்றும் தட் டச்சு, சுருக்கெழுத்து பிரிவில் சேர்ந்து கல்வி பயில விரும்புவோருக்கு இலவசமாக உணவு, சீருடை, பாடக் குறிப்பேடுகள் மற்றும் இருப்பிட வசதிகள் செய்து தரப்படும். சேவை இல்லத்தில் சேர்ந்து கல்வி பயில விரும்பும் பெண்கள் 16 வயது பூர்த்தி அடைந்தவரும் 40 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பெற்றோர், பாதுகாவலருக்கு ஆண்டு வருமானம் 24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். சேவை இல்லத்தில் சேர விரும்புவோர் விண்ணப்பத்தினை இலவசமாக அஞ்சல் மூலமாகவோ நேரிலோ கண்காணிப்பாளர் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளி, நெல்லிக்குப்பம் மெயின்ரோடு, கடலூர் என்கிற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக