நெய்வேலி:
என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை கடலூர் எம்பி கே.எஸ். அழகிரி முன்னிலையில் நடத்தவேண்டும் என என்எல்சி பிற்படுத்தப்பட்டோர் தொழிற்சங்கப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இப்பேரவையின் ஆலோசனைக் கூட்டம் நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வீரவன்னியவேங்கன் வரவேற்றார். அகில இந்திய செயலர் வன்னியராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இக் கூட்டத்தில், என்எல்சி தொழிலாளர்களின் புதிய ஊதியமாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் போது, கடலூர் எம்.பி.யும், பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் சிறப்புத் தலைவருமான கே.எஸ்.அழகிரி முன்னிலையில் நடத்தவேண்டும் என என்எல்சி தலைவரை கேட்டுக்கொள்வது, கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் திரளாகக் கலந்துகொள்வது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக