பண்ருட்டி:
பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் 1,008 தாமரை மலர்களால் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.
பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள பெருந் தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 23ம் தேதி திருபவித்ரம் உற்சவம் துவங்கியது. விழாவை முன்னிட்டு தாயார், வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 5 மணிக்கு முதல்கால பூர்ணாகுதியும், 24ம் தேதி காலை 8 மணிக்கு பவித்ரம் சாற்றுதல், 2ம் கால பூஜையும், மாலை 5 மணிக்கு 3ம் கால பூஜையும் நடந்தது.
நேற்று முன்தினம் 25ம் தேதி காலை 6 மணிக்கு திருவாராதனம், நித்ய ஹோமம், 4ம் கால பூஜை, கும்பம் புறப்பாடு நடந்து. மாலை 6 மணிக்கு உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு 1,008 தாமரை மலர்களால் சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சிவஞானம், பரம்பரை அறங்காவலர் பாண்டுரங்கன், தாமரைப்பூ சகஸ்ரநாம குழுவினர் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக