தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணைவேந்தர் பத்மநாபன் கூறினார். தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் மூலம் வரும் கல்வியாண்டில் இருந்து 4 ஆண்டு பி.எட். பட்டப் படிப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது பி.ஏ, பி.எட் அல்லது பி.எஸ்.சி., பி.எட் என வழங்கப்படும். 3 ஆண்டு படித்தவுடன் பி.ஏ. அல்லது பி.எஸ்.சி. பட்டம் மட்டும் கொடுக்க முடியாது. 4 ஆண்டும் கல்வியியல் பாடங்கள் இடம்பெறும் வகையில் இப்படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஆண்டு பி.எட் வந்தாலும், ஒரு ஆண்டு பி.எட். படிப்பும் தொடரும் என்றார் அவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக