கடலூர்:
உயிர்காக்கும் உயர் சிகிச்சை திட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு 405 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பன்னீர்செல்வம் வியன்னா மாநாட்டில் பேசினார். ஆஸ்திரியா நாட்டில் வியன்னா நகரில் 18வது பன்னாட்டு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மாநாடு நடந்தது.
இம்மாநாட்டில் இந்திய குழுவிற்கு தலைமை தாங்கி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழக முதல்வரின் சீரிய தலைமையில் மக்கள் நல்வாழ் வுத்துறை மிகச் சிறப்பாக செயல் பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தலை சிறந்த அமைப்பாக திகழ்கின்றன. தேசிய ஊரக நல்வாழ்வுத் திட்டம் மூலமாக அனைவருக்கும் அடிப்படை சுகாதார வசதி அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதாரத் துறைக்கான அரசு நிதி ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
2006-07ல் 1,951 கோடி ரூபாயாக இருந்தது நடப்பு ஆண்டில் 3,888 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை எளியோரின் உயிர்களை காப்பாற்றக் கூடிய திறமை மற்றும் தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் இம் மாநிலத்தில் உள்ளனர். அவர்களின் சேவை தனியார் மருத்துவமனைகளில் கிடைப்பதால் பொது மக்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு முதல்வர் உயிர்காக்கும் உயர் சிகிச்சை திட்டத்தில் 1.44 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ உதவிக்கான அடையாள அட்டை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்திட்டத்திற்கு 1,242 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் 51 வகையான உயிர்காக்கும் உயர் சிகிச்சைகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 565 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அளிக் கப்படுகிறது. இதுவரை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 560 பேருக்கு சிகிச்சைக்காக 405 கோடி ரூபாய் வழங்கப்பட் டுள்ளது. மேலும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை என்ற சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 லட்சத்து 23 ஆயிரத்து 716 அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களில் ஆபத்தான நிலையில் இருந்த 24 ஆயிரத்து 455 நோயாளிகளுக்கு ஆம்புலன்சில் முதலுதவி அளிக்கப்பட்டது.
பிரசவ உதவி தேவைப்பட்ட ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 215 கர்ப்பிணி பெண்கள் பாதுகாப் பாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதால் பிரசவ காலங்களில் ஏற்படும் உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதாரத் திட்டம் 534 கோடி ரூபாய் செலவில் ஐந்தாண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் 786 எய்ட்ஸ் மையங்கள் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு 32 லட் சத்து 71 ஆயிரத்து 194 நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் .மாநிலம் முழுவதும் 37 ஏ.ஆர்.டி., மையங்கள் இயங்கி வருகின்றன.
இவ்வாண்டில் மேலும் 3 மையங்கள் தொடங் கப்படவுள்ளன. இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 735 நோயாளிகள் ஏ.ஆர்.டி., மையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 67 ஆயிரத்து 523 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். பரிசோதிக்கப்பட்ட அனைவருமே சிடி4 எண்ணிக்கை கருத்தில் கொள்ளாது ஏ.ஆர்.டி., மையங்களில் பதிவு செய்து கொள்கின்றனர். சிடி4 எண்ணிக்கை 250க்கும் குறைவாக உள்ள அனைவருக்கும் வாழ் நாள் முழுவதும் சிகிச்சை பெறும் வகையில் தனியாக அட்டைகள் வழங்கப்படுகிறது. சிடி4 எண்ணிக்கை 250க்கும் மேல் உள்ள நோயாளிகள் தொடர்ந்து 6 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதித்துக் கொள்ள ஏ.ஆர்.டி., மையங்களுக்கு வரவேண்டும் .இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக