புவனகிரி:
புவனகிரி பகுதி விவசாயிகள் எள் பயிர் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் 697 எக்டரில் மானாவாரி பயிரான எள் பயிர் செய் யப்பட்டுள்ளது. எக்டருக்கு 500 கிலோ வரை விளைச்சல் கிடைக்கும் எள் மூட்டை (80 கிலோ) தற்போது 3, 200 முதல் 3,800 வரை விலை கிடைக்கிறது.
கடலூர் முதுநகர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 26.4 மெட்ரிக் டன், பண்ருட்டியில் 189.6, விருத்தாசலத்தில் 2,056, திட்டக்குடியில் 91, குறிஞ்சிப்பாடியில் 686.4, ஸ்ரீமுஷ்ணத்தில் 28.5 மெட்ரிக் டன்னும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதியான குமராட்சியில் மட்டும் இந்த ஆண்டு 140 எக்டர் எள் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது புவனகிரி பகுதியிலும் விவசாயிகள் எள் பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.காரணம் நெல் 100 கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு 1,100 ரூபாய் மட்டுமே கிடைக்கும் இந்த நிலையில் அதிக விலைக்கு போகும் மானாவாரி பயிரான எள் பயிர் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக