பலாசூர்:
எதிரி ஏவுகணையை இடைமறித்துத் தாக்கும் திறன்வாய்ந்த, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒரிசா கடற்கரைக்கு அப்பால் வீலர் தீவுப் பகுதியில் இந்த பரிசோதனை நடந்தது. முதலில் சந்திப்பூர் ஏவுதளத்திலிருந்து காலை 10 மணியளவில் பிருத்வி ஏவுகணை நடமாடும் வாகனம் மூலம் ஏவப்பட்டது. இதைத்தொடர்ந்து வீலர் தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த வான்வழி பாதுகாப்பு (ஏஏடி) ஏவுகணை, சிலநிமிடங்களில் ராடார்கள் மூலமாக சிக்னல்களைப் பெற்று பிருத்வி ஏவுகணையை நடுவானில் இடைமறித்து தாக்கியதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக