உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 24, 2010

கடலூரில் கடல் சீற்றம்: விசைப்படகு கவிழ்ந்தது

கடலூர் : 

             கடலூரில் இரண்டாம் நாளாக நேற்றும் கடல் அலை சீற்றமாக காணப்பட்டது.

             கடலூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங் களில் குளிர்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் கடலூரில் தேவனாம்பட்டினம், தாழங் குடா, சிங்காரத் தோப்பு, சொத்திக்குப்பம், ராசாப் பேட்டை, அக்கரைக் கோரி உட்பட பல பகுதிகளில்  இரண்டு நாட்களாக வழக்கத்திற்கும் மாறாக கடல் அலை இரண்டு மீட்டர் உயரத்திற்கு எழும்பி அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. அக்கரைக்கோரியைச் சேர்ந்த தி.மு.க., கவுன்சிலர் சம்பத் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் பெரியக்குப்பம் மீனவர்கள் அரசப்பன் (48), ஆறுமுகம் (54), மற்றொரு ஆறுமுகம் (55), அக்கரைகோரி சேகர் (37), நஞ்சலிங்கம்பேட்டை சண்முகம் ஆகியோர் 21ம் தேதி மீன்பிடிக்கச் சென்று நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கரை திரும்பினர்.

                  முதுநகர் துறைமுகம் அருகே வந்தபோது அலையின் சீற்றத்தில் சிக்கி முகத்துவாரத்தில்  கொட்டப்பட் டுள்ள கருங்கற்களில் மோதி விசைப்படகு கவிழ்ந்தது. அதிலிருந்த மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். காயமடைந்த ஆறுமுகம் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் கவிழ்ந்த படகை மீனவர்கள் உதவியுடன் கயிறு கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.இதனால் அச்சமடைந்த கடலூர் பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாததால் அனைத்து படகுகள் துறைமுகம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டன.  மேலும் அதிகாலையிலேயே மீன் பிடிக்கச் சென்ற சிலரும் கரை திரும்பினர். எப்போதும் பரபரப்புடன் காணப் படும் கடலூர் மீன்பிடி துறைமுகம் நேற்று வெறிச் சோடி காணப்பட்டது. கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சிலும் பொது மக்கள் வருகை குறைந்திருந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior