உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 24, 2010

லைலா புயலால் கிடைத்த மழை நீர் கொள்ளிடத்தில் சேமிக்கப்பட்டது: பொதுப்பணித் துறை பொறியாளர் தகவல்

கடலூர்:

           லைலா புயல் காரணமாக கிடைத்த மழைநீர் கொள்ளிடத்தில் தேக்கி வைத்து விவசாயத்துக்கு வழங்கப்பட்டது என்று பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (கொள்ளிடம் வடிநிலக் கோட்டம்) செல்வராஜ் தெரிவித்தார்.

பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (கொள்ளிடம் வடிநிலக் கோட்டம்) செல்வராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

            ஜனவரி 28ல் மேட்டூர் அணை மூடப்பட்ட பிறகு 2 மாதங்கள் வந்த கசிவுநீரை சேமித்து மார்ச் மாதம் வரை விவசாயத்துக்கு வழங்கினோம். லைலா புயல் காரணமாக கிடைத்த மழைநீரை கொள்ளிடத்தில் தேக்கி வைத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பாசனத்துக்கு அளிக்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு வீராணம் ஏரி மழைநீரால் 42 அடியில் இருந்து 20-5-2010 அன்று 46.6 அடியாக உயர்த்தப்பட்டது.  தலைமைப் பொறியாளரின் அறிவுரைப்படி மழைநீர் வீணாகாமல் இந்த ஆண்டு சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

               தொன்று தொட்டு பராமரிப்புக் காலம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை என்று இருந்தது, மழைநீர் சேமிக்கப்பட்டதன் காரணமாக ஜூலை முதல் ஆகஸ்ட் வரை என்று இந்த ஆண்டு மாற்றப்பட்டது. கொள்ளிடத்தில் மழைநீர் 22-ம் தேதி ஒருநாள் மட்டும் 10 மணி நேரம், வினாடிக்கு  600 கன அடி வீதம் ஆற்றில் சென்றது. நீர்வள ஆதாரத்துறை மிக விரைவில் பராமரிப்புப் பணிகளை முடித்து மழைநீர் சேமிக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior