உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 24, 2010

கடலூர் மாவட்டத்தில் ஆடிவெள்ளி கோவில்களில் சிறப்பு பூஜை

கடலூர் : 

          ஆடிவெள்ளியையொட்டி கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் அம்மன் கோவில்களில் சாகை வார்த்தல், செடல், பால்குட ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

            கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள லோகாம் பாள் அம்மன் கோவிலில் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சாகை வார்க்கப்பட்டு மகா தீபாராதனையும், இரவு 7 மணிக்கு வீரனுக்கு கும்பம் கொட்டும் உற்சவம் நடந்தது. இரவு 8 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது.

குண்டு உப்பலவாடி: 

             நாகாத்தம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு பெண் ணையாற்றிலிருந்து கரகம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பகல் 1 மணிக்கு சாகை வார்த்தல், மாலை 4 மணிக்கு சந்தனக் காப்பு, செடல் உற்சவம், தீபாராதனை நடந்தது. ஏராளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

சிதம்பரம்: 

              வெள்ளந் தாங்கி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 16ம்தேதி துவங்கியது. நிறைவு நாள் விழா 26ம்தேதி நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு விசேஷ அபிஷேக ஆராதனையும் மதியம் ஒருமணிக்கு கஞ்சி வார்த்தல், அன்னதானம் நடக்கிறது. மாலை 6மணிக்கு அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடக்கிறது.

விருத்தாசலம்: 

               எம்.ஆர்.கே., நகரில் உள்ள ஓம் சக்தி கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு பக்தர்கள் மணிமுக்தா ஆற்றில் இருந்து பால்குடங்களுடன் ஜங்ஷன் ரோடு வழியாக ஊர்வலமாக சென்றனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior