பண்ருட்டி :
பண்ருட்டி நகராட்சிப் பகுதியில் அறிவிப்பு செய்துவிட்டு பொறுப்பு அதிகாரிகள் திடீரென "ஆப்சென்ட்' ஆனதால் சம்பிரதாயத்திற்காக ஆக் கிரமிப்பை அகற்றினர்.
பண்ருட்டி நகராட்சி பகுதியில் பஸ்நிலையம், ராஜாஜி சாலை, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ் சாலை, காந்திரோடு, கடலூர் சாலை, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பெரிதாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாதந்தோறும் ஆக்கிரமிப்புகளை அகற்றிட கலெக்டர் சீத்தாராமன் நகராட்சி கமிஷனருக்கு உத்திரவிட்டார்.அதன்பேரில் நகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கமிஷனர் உமா மகேஸ்வரி உத்திரவிட்டார்.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி முக்கிய வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி சார்பில் "டாம் டாம்' அறிவிப்பு செய்தனர். உத்தரவு போட்ட கமிஷனர் விடுப்பிலும், பொறுப்பு வகித்த கமிஷனர் பயிற்சிக்காக சென்னைக்கும் சென்று விட்டதால் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி கடிதம் கூட நகராட்சி சார்பில் வழங்கப்படவில்லை.
இதனால் நேற்று காலை 10 மணிக்கு கூட ஆக்கிரமிப்புகள் அகற்றுவதா ? வேண்டாமா ? என்கிற குழப்பத்தில் நகராட்சி ஊழியர்கள் இருந்தனர். நீண்ட குழப்பத்திற்கு பின் 11 மணிக்கு நகரமைப்பு ஆய்வர் சாம்பசிவம், வருவாய் ஆய்வாளர் தனகோடி, சர்வேயர் அழகேசன், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், சுதாகரன் உள்ளிட்ட ஊழியர்கள் காந்திரோட்டில் மட்டும் ஆக்கிரமிப்பை அகற்றினர். முறைப்படி அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படாததால் பொது மக்கள் கவலையடைந் தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக