உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 24, 2010

மாநில தடகள போட்டியில் நெய்வேலி பள்ளி மாணவி சாதனை

நெய்வேலி:

              நாகர்கோவிலில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் நெய்வேலி குளூனி பள்ளியைச் சேர்ந்த மாணவி சி.டீனா ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

               தமிழகப் பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான தடகளப் போட்டி இம்மாதம் 16 முதல் 18-ம் தேதிவரை நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் 3 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 14-வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் நெய்வேலி செயின்ட் ஜோசப் ஆப் குளூனி பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி சி.டீனா குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் 100 மீட்டர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்றார். இதில் 100 மீ ஓட்டப் போட்டியில் பங்கேற்ற டீனா 12.8 வினாடிகளில் தூரத்தைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

            இதேபிரிவில் நெய்வேலி ஜவகர் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ஜி.பிரியங்கா 3-ம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு போட்டியில் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் நெய்வேலி ஜவகர் சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி எம்.கீதா வெண்கலப் பதக்கம் வென்றார். 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனைப் படைத்த மாணவி சி.டீனா அடுத்த மாதம் கர்நாடக மாநில சித்ரதுர்காவில் நடைபெறவுள்ள தென்மண்டல

              ஜூனியர் தடகளப் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று சாதனைப் படைத்த வீராங்கனைகளையும், பயிற்சியாளர்கள் அந்தோணி மற்றும் வீரபத்ரன் ஆகியோரை என்எல்சி விளையாட்டுத் துறை மேலாளர் நாராயணன் பாராட்டியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior