உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 31, 2012

தமிழகத்தில் புதிய மின் கட்டணம் அமல் - உயர்த்தப்பட்ட கட்டண விபரம்

           தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் புதிய மின் கட்டணம் நடைமுறைக்கு வரவுள்ளது.


       இதற்கான உத்தரவை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் வெள்ளிக்கிழமை வழங்கியது. இதன்படி, வீடுகள் உள்ளிட்ட குறைந்தழுத்த மின் இணைப்புகளுக்கான கட்டணம் ஒட்டுமொத்தமாக 45 சதவீதம் உயருகிறது. தொழிற்சாலைகள் உள்ளிட்ட உயரழுத்த மின் இணைப்புகளுக்கான கட்டணம் 25 சதவீதம் உயருகிறது.
 
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் கே. வேணுகோபால், எஸ். நகுல்சாமி ஆகியோர் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
 


      ஆண்டுக்கு ரூ. 9,742 கோடி அளவுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் மின் கட்டண உயர்வு இருக்க வேண்டும் என ஆணையத்திடம் மின்சார வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது. தீவிரப் பரிசீலனைக்குப் பின், ஆண்டுக்கு ரூ. 7,874 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்த மின்னழுத்த இணைப்புகள் மூலம் ரூ. 5,300 கோடி கூடுதல் வருவாயும், உயர் மின்னழுத்த இணைப்புகள் மூலம் ரூ. 2,574 கோடி கூடுதல் வருவாயும் கிடைக்கும்.
 


      வீடுகளுக்கான கட்டண உயர்வு குறித்த மின்வாரிய பரிந்துரையில் மட்டும் சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு 100 யூனிட்டுகளுக்கும் கீழ் மின்சாரத்தைப் பயன்படுத்தும் பெட்டிக் கடைகளுக்கான மின் கட்டணம், மின் வாரியம் கேட்டதைவிடக் குறைக்கப்பட்டுள்ளது. மின் வாரியத்தின் பிற பரிந்துரைகள் அனைத்தும் அப்படியே நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன.
 
சப் மீட்டர் கணக்கில் கொள்ளப்படாது: 


         வாடகை வீட்டில் குடியிருப்போரின் சப் மீட்டர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இதனால் வாடகை வீட்டில் குடியிருப்போர் அதிக அளவு கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும்.
 
 உயர்த்தப்பட்ட கட்டணம்  (இரண்டு மாதங்களுக்கு)


 * 100 யூனிட் வரை ரூ. 2.60
 (அரசு மானியம் ரூ.1.60 -
 நுகர்வோர் கட்டணம் ரூ.1.10).
 தற்போது 1 யூனிட் 85 பைசா.

 * 101 யூனிட் முதல்
 200 யூனிட் வரை ரூ. 2.80
 (அரசு மானியம் ரூ.1.00,
 நுகர்வோர் கட்டணம் ரூ.1.80)

 * 201 யூனிட் முதல்
 500 யூனிட் வரை ரூ.4.00
 (அரசு மானியம் 50 பைசா - நுகர்வோர் கட்டணம் ரூ. 3.50). இதில், முதல் 200 யூனிட்களுக்கு ரூ. 3-ம், 201 வது யூனிட்டிலிருந்து 500 யூனிட் வரை ரூ. 4-ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

 * 500 யூனிட்டுகளுக்கு மேல்- ரூ.5.75 (அரசு மானியம் கிடையாது)

 * * * ஒவ்வொரு நுகர்வோரும் 2 மாதங்களுக்கு ஒருமுறை சேவைக் கட்டணம் என்ற முறையில் ரூ. 20 கூடுதலாகச் செலுத்த வேண்டும்.








 

Read more »

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 16 லட்சம் விண்ணப்பங்கள்




      ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 16 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி தெரிவித்தார்.


     விண்ணப்பம் கோரும் அனைவருக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கிடைக்காததால் தருமபுரி உள்ளிட்ட இடங்களில் பிரச்னை ஏற்பட்டு போலீஸ் தடியடியும் நடத்தியது.
 
பல இடங்களில் விண்ணப்பங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
 

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்ப விநியோகம் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

ஆனால், விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல்நாளே 3 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்பனையாகின. இதையடுத்து, கூடுதலாக 6 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. ""ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் முதல் முறையாக ஜூன் 3-ம் தேதி நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தோராயமாக 8 லட்சம் பேர் வரை எழுதுவார்கள் என்று எதிர்பார்த்து மொத்தம் 10 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன.

          எங்கெங்கு விண்ணப்பங்கள் தேவையோ, அங்கு உடனடியாக அனுப்பப்பட்டு வருகிறது. விண்ணப்பம் கோரும் அனைவருக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் இதுதொடர்பாக எந்தவித கவலையும் அடைய வேண்டாம். விண்ணப்பதாரர்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஆசிரியராக விருப்பமுள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பத்தை வாங்கும்போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

           இதில் 12 லட்சம் விண்ணப்பங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் 4 லட்சம் விண்ணப்பங்கள் உள்ளன. ஒரு மாவட்டத்தில் விண்ணப்பங்கள் தீர்ந்துவிட்டால், அருகில் அதிகமாக விண்ணப்பங்கள் உள்ள பகுதியிலிருந்து உடனடியாக அந்த மையங்களுக்குக் கொண்டுவரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, விநியோக மையங்களில் விண்ணப்பங்கள் தீர்ந்துவிட்டால் யாரும் பதற்றமடைய வேண்டாம்.
 
      மாவட்டந்தோறும் உள்ள மையங்களில் எவ்வளவு விண்ணப்பங்கள் உள்ளன என்பதை சென்னையில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.  விரைவில் கணினிமயமாக்கப்படும்: விண்ணப்ப விநியோகம், சமர்ப்பிக்கும் முறை ஆகியவை விரைவில் முழுமையாகக் கணினிமயமாக்கப்படும். இதற்கான பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிற்குள் நடைபெறும் ஏதேனும் ஒரு ஆசிரியர் தேர்வை முழுவதும் ஆன்-லைன் மூலம் நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகமானோர் தேர்ச்சியடைய வேண்டும்: இந்தியா முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி விகிதம் வெறும் 7 சதவீதம் மட்டுமே இருக்கிறது. தமிழகத்தில் இந்தத் தேர்வு எழுதும் அனைவரும் தங்களைச் சிறப்பான முறையில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். 
      இந்தத் தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி பெற வேண்டும் என விரும்புகிறேன்.  மிகப்பெரிய ஒரு தேர்வை மிகக் குறைந்த ஆள்பலத்துடனும், வசதிகளுடனும் நடத்துகிறோம். இதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தேர்வைச் சிறப்பாக நடத்த விண்ணப்பதாரர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்குத் தேவை'' என்றார் அவர்.
 
 தேவைப்பட்டால் கடைசித் தேதி நீட்டிக்கப்படும்


 ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் தேதி தேவைப்பட்டால் நீட்டிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சுர்ஜித் கே.சௌத்ரி தெரிவித்தார்.
 


         ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இப்போதும் விற்பனையாகி வருகின்றன.
ஏதேனும் ஒரு பகுதியில் மொத்தமாக விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என்றாலோ அல்லது விண்ணப்பங்கள் தாமதமாகக் கிடைத்தது என்றாலோ தேதி நீட்டிப்பு செய்வது குறித்துப் பரிசீலனை செய்யப்படும். 

       மொத்தம் 8 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பரிசீலிக்க வேண்டியுள்ளதால் அதற்குரிய கால அவகாசம் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்குத் தேவைப்படுகிறது. எனினும் இதுதொடர்பான இறுதி முடிவு ஏப்ரல் 3-ம் தேதி எடுக்கப்படும் என்றார் அவர்.
 

Read more »

நாட்டார்மங்கலம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு டில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா


கடலூர் : 

      நாட்டார்மங்களம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு டில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.


       கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த நாட்டார்மங்களம் ஊராட்சித் தலைவர் சுதா மணிரத்தினம் மற்றும் 9 வார்டு பெண் உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 100 சதவீதம் பெண்களே பொறுப் பேற்றதால் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்த டில்லி தமிழ்ச்சங்கம் டில்லிக்கு அழைத்திருந்தது. அதன்படி நாட்டார்மங்களம் ஊராட்சித் தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் கிராம பிரதிநிதிகள் 500 பேர் டில்லி சென்றனர். அங்கு நடந்த பாராட்டு விழாவிற்கு காங்., தமிழக தலைவர் ஞானதேசிகன் எம்.பி., தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர் வாசன் வாழ்த்திப் பேசினார். தொழிலதிபர் மணிரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.


        ஊராட்சித் தலைவர் சுதா மணிரத்தினத்திற்கு தமிழ்ச்சங்கம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து டில்லி விஸ்வேஷ் சேவா சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிரண்வாலிடா பாராட்டி பேசினார். அதனை தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி தனது வீட்டில் விருந்தளித்தார்.










Read more »

வியாழன், மார்ச் 29, 2012

கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் "ஆபரேஷன் ஹாம்லா'

(1) கடலூர் தேவனாம்பட்டினத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸார். (2) காரைக்கால் கடலோரப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீஸார். 
கடலூர்:

         கடலூர் மாவட்ட கடலோர கிராமங்களில் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
 
      ஆபரேசன் ஹாம்லா-2 என்ற பெயரில் தீவிரவாதிகளின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் போலீஸார் இந்த ஒத்திகைத் தணிக்கையை மேற்கொண்டனர்
கிராமங்களில் கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. கடலோர கிராமங்களில் சந்தேக நபர்கள் வந்தால் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். கடலோரப் பகுதிகளில் போலீஸ் தணிக்கைச் சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், கடலோரப் பகுதி மக்களும், போலீஸாரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்த ஹாம்லா ஆபரேசன் 2 என்ற ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.
           தமிழகத்தின் கடலோர கிராமங்கள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்ற அச்சம் உள்ளது. எனவே கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.
 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இந்த அதிரடி சோதனை, கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பகலவன் மேற்பார்வையில், கடலூர் மாவட்ட கடலோரக் கிராமங்களில் நடத்தப்பட்டது. வல்லம்படுகை முதல் நல்லவாடு வரை உள்ள கடலோரக் கிராமங்களில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 

     சந்தேகப்படும் நபர்கள் தீவிரமாக விசாரிக்கப்பட்டனர். கடலோர கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளில் உள்ள போலீஸ் தணிக்கைச் சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடலோர கிராமங்களுக்கு வரும் படகுகள், அவற்றில் பணிபுரியும் மீனவர்கள் அனைவரும் சோதனையிடப்பட்டனர். கடற்கரைப் பகுதிகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டன. ÷கடலோரக் கிராமங்களை ஒட்டிய நகரப் பகுதிகளிலும் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
 தீவிரவாதிகள் போல் வேடமிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் கடலூர் துறைமுகம் சிங்காரத் தோப்புப் பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டனர். இந்த தீவிர வேட்டை வியாழக்கிழமை அதிகாலை வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 புதுச்சேரியில்...
 

புதுச்சேரியில் தீவிரவாதிகள் ஊடுருவினால் அவர்களை எவ்வாறு பிடிப்பது என்பது குறித்து ஹாம்லா ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
 காலாப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடி பகுதி கடற்கரை வழியாக 8 பேர் ஊடுருவினர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலாப்பட்டு உதவி ஆய்வாளர் வெற்றிவேல் தலைமையில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். அவர்கள் 5 பேரை பிடித்தனர். மூவர் தப்பிவிட்டனர். அவர்களிடம் இருந்து டம்மி வெடிகுண்டுகள் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை போலீஸார் கைப்பற்றினர். இதேபோல் காரைக்கால், வம்பாகீரப்பாளையம், குருசுகுப்பம், தேங்காய்திட்டு, நல்லவாடு உள்ளிட்ட மீனவ கடற்கரை கிராமங்களில் ஹாம்லா ஆபரேஷன் ஒத்திகை நடைபெற்றது. இதில் தீவிரவாதிகளைப்போல் போலீஸாரே படகுகள் மூலம் கடற்கரை வழியாக ஊடுருவினர். அதை மற்றொரு போலீஸ் படை கண்டுபிடித்தனர். தீவிரவாதிகள் ஊடுருவினால் எச்சரிக்கையாக இருப்பதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.






Read more »

வாழைச் சாகுபடியில் புதிய சேமிப்பு முறைகள்


பதப்படுத்தப்படும் வாழைப்பழங்கள். பேக் செய்யப்பட்ட பழங்கள்.
சிதம்பரம்: 

           வாழை, அறிவியல் வகைப்பாட்டின் பூண்டு தாவரங்களைக் கொண்ட பேரினமாகும். உலகம் முழுவதும் வாழையின் தேவை வெகுவாக அதிகரித்து வருகிறது. சுமார் 9.6 மில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ள வாழை சந்தையில் நமது பங்களிப்பு 0.01 சதவீதம்தான்.
 
       கடந்த 2003-04-ல் வாழைப் பழங்களின் மொத்த ஏற்றுமதி மதிப்பு ரூ.11 கோடியில் இருந்து 2007-08ல் ரூ.26 கோடி ரூபாயாக உயர்ந்து, கடந்த ஆண்டு ரூ.55 கோடி வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சியம் தெரிவிக்கிறது. இந்நிலையில் வாழைப்பழத்தை புதிய முறையில் நீண்ட நாள்கள் கெடாமல் பதப்படுத்தி வாழை விவசாயிகள் ஏற்றுமதி செய்து அதிக லாபம் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை உதவிப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவிக்கிறார்.

         இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் வாழையின் தேவை அதிகம் உள்ளதால், ஏற்றுமதியில் கவனம் இல்லை எனக் கூறப்பட்டாலும், உலக சந்தையில் 2015-ம் ஆண்டுக்குள் நமது பங்கை இரண்டு சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு அதற்குண்டான விரிவாக்க முயற்சிகள் தொடர்கின்றன தேசிய தோட்டக்கலை மிஷன் (சஏங) சில முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் ஆண்டொன்றுக்கு வாழை சாகுபடி 10 முதல் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவிக்கிறது.
 
           2007-ல் 6,04,000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட வாழை 21 மில்லியன் டன் விளைச்சலைக் கொடுத்தது. இப்போது சாகுபடி பரப்பளவு 7,80,000 ஹெக்டேராக அதிகரித்து, விளைச்சலும் 27 மில்லியன் டன்களை தாண்டியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நேந்திரன், ரஸ்தாளி, பூவன், ரோபஸ்டா, சினிசம்பா, செவ்வாழை போன்ற பல ரகங்கள் பயிரிடப்பட்டாலும், அவற்றின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை தேவைகளை சந்திக்க புதிய சேமிப்பு முறைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

புதிய சேமிப்பு முறைகள்:

 வாழைப் பழங்களை உள்நாட்டு சந்தை மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்ய புதிய சேமிப்பு முறைகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


 மாறுபட்ட சூழலில் சேமிப்பு முறை: 

       வாழைப் பழங்களைப் பாதுகாக்க இந்த சேமிப்பு முறையில் மிகவும் குறைந்தளவு குளிரில் சேமிக்கப்படுகிறது. சுமார் 90 நாள்கள் வரை வாழைப் பழங்கள் இம்முறையில் பாதுகாக்கப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்ய முடியும்.

         கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் சேமிக்கும் முறை: வாழை கட்டுப்படுக்தப்பட்ட சூழல் பாதுகாப்பு முறைக்கு மிகவும் உகந்ததாகக் காணப்படுகிறது. இப்பாதுகாப்பு முறையில் வாழைப் பழங்களின் பழுக்கும் தன்மை மற்றும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வெகுவாக கெடும் சூழல் குறைக்கப் படுகிறது. எனவே வாழை ஏற்றுமதியின்போது நீண்ட கடல் பயணத்தின்போதுகூட கெடாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு முறையில் பழுக்காத வாழைப் பழங்களை 75 நாள்கள் வரை சேமித்து வைக்க முடியும், பின்னர் தகுந்த சூழலில் வைத்தால் 4 முதல் 5 நாள்களில் நன்றாக பழுக்க வைக்க முடியும்.

 
         இவ்வாறு இப்புதிய சேமிப்பு முறைகள் வாயிலாக வாழைப் பழத்தை சேமித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை தேவைகளை நிறைவு செய்து வாழை விவசாயிகள் மற்றும் வாழை வியாபாரிகள் அதிகளவு லாபம் அடைய முடியும் என்கிறார் முனைவர் தி.ராஜ்பிரவீன்.






Read more »

கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை


கடலூர் :

     பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றிட முதல் கட்டமாக அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.


     முன்பெல்லாம் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கடைக்கு செல்லும் போது துணிப்பை கொண்டு செல்வது வழக்கம். ஆனால், இன்று எண்ணெய் கூட பாலித்தின் கவரில் வாங்கிச் செல்லும் நிலைக்கு மாறிவிட்டது. இவ்வாறு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வீதிகளில் எறியப்படுகிறது. இவை எளிதில் மக்குவதில்லை. இதனால் மண்ணில் மழை நீர் இறங்குவதை தடை செய்வதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதோடு, மண்ணின் வளமும் குறைந்து வருகிறது. இயற்கை வளத்தை மாசுபடுத்தும் எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என இயற்கை வள ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ள ராஜேந்திர ரத்னு, மாவட்டத்தில் சுற்றுச் சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


     அதனையொட்டி சுற்றுச் சூழலையும், மண் வளத்தையும் பாழ்படுத்தி வரும் மக்கா தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாத மாவட்டமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். அதனையொட்டி அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு நோட்டீஸ் மற்றும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பள்ளி, கல்லூரி வளாகங்களிலும், அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கூடும் இடங்களான கோவில், பீச், பஸ் நிலையங்களில் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


              அதற்கு முன்பாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி விட்டு எறிவதால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பை மக்கள் உணரும் வகையில் பள்ளி கல்லூரி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கையை இயற்கை ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டுகின்றனர்.  மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக்கிட கலெக்டர் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.













Read more »

முதியோர்களை ஆதரிப்பதில் கடலூர் மாவட்டம் முன்மாதிரி


கடலூர் :

       ""முதியோர்களை ஆதரிப்பதில் கடலூர் மாவட்டம் முன்மாதிரியாக உள்ளது'' என மாநில மகளிரணி ஆணையத் தலைவர் கூறினார்.


    மாநில மகளிர் ஆணையத்தில் கடந்த 2009 முதல் 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான ஆய்வுக் கூட்டம் நேற்று கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. மகளிர் ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜேந்திர ரத்னு, எஸ்.பி., பகலவன் முன்னிலை வகித்தனர். சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரி மற்றும் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் மகளிர் ஆணையத்தில் பெறப்பட்டு நிலுவையில் இருந்த 32 மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது மனு கொடுத்தவர்கள் மற்றும் அதில் குற்றம் சாட்டப்பட்ட இருதரப்பினரும் அழைத்து விசாரிக்கப்பட்டனர். அதில், போலீஸ் துறையில் நிலுவையில் இருந்த 24 மனுக்களில் 22ம், சமூக நலத்துறையில் நிலுவையில் இருந்த 8 மனுக்களில் நான்கும் தீர்வு காணப்பட்டன. மற்ற 6 மனுக்களின் முகவரி சரியாக இல்லாத காரணத்தினால் நிலுவையில் உள்ளது.


பின்னர் மகளிர் ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி நிருபர்களிடம் கூறியது:


     நான் பொறுப்பேற்ற கடந்த 6 மாதத்தில் 9 மாவட்டங்களுக்கு நேரில் சென்று நிலுவை மனுக்கள் மீது ஆய்வு செய்து வருகிறேன். கடலூர் மாவட்டத்தில் நிலுவையில் இருந்த 32 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி., மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயப்பட்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் வரதட்சணை தொடர்பான புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி உடனுக்குடன் தீர்வு கண்டு வருவது பாராட்டுக்குரியது.


      நான் இதுவரை ஆய்வு கொண்ட 8 மாவட்டங்களில் இல்லாத வகையில் கடலூர் மாவட்டத்தில் முதியோர்களுக்கு என தனி இல்லம் அமைத்து ஆதரவற்ற முதியவர்களுக்கு மருத்துவம் மற்றும் குடும்பத்திலிருந்து பிரிந்து வந்தவர்களை மீண்டும் அவர்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்திட உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. நான் இதுவரை ஆய்வு செய்த மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வரதட்சணைக் கொடுமை அதிகமாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மகளிர் ஆணைய தலைவர் கூறினார்.














Read more »

சிதம்பரம் கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லூரி சார்பில் ரத்ததான முகாம்


சிதம்பரம் :

       சிதம்பரம் கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லூரி என்.எஸ்.எஸ்., அரிமா சங்கம், சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.

      கல்லூரியில் நடந்த முகாமிற்கு கல்லூரி தாளாளர் மணிமேகலை கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பழனிவேல், அரிமா ஆளுனர் கல்யாண்குமார், மாவட்டத் தலைவர் நாகப்பன், அரிமா சங்கத் தலைவர் ரமேஷ்சந்த், கல்லூரி நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிவக்குமார், பிரேம்குமார் பங்கேற்றனர். 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனர். ஏற்பாடுகளை என். எஸ்.எஸ்., அலுவலர்கள் அப்பர்சாமி, பாலசுந்தரம் செய்திருந்தனர்.








Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி


விருத்தாசலம் :

     கம்ப்யூட்டர் பயிற்சிக்கான இளைஞர்கள் தேர்வு முகாம் விருத்தாசலத்தில் நடந்தது. தமிழ்நாடு அரசு புதுவாழ்வு திட்டம், மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பினை பெற்றுத் தரும் நோக்கத்துடன் விருத்தாசலம் பூதாமூர் சூரியா ஐ.டி.ஐ., யில் பயிற்சிக்கான இளைஞர்கள் தேர்வு முகாமை நடத்தியது.


      முகாமிற்கு புதுவாழ்வு திட்ட மேலாளர் நித்தியானந்தம் தலைமை தாங்கினார்.  முகாமில் சி.எஸ்.சி., அப்பல்லோ கம்ப்யூட்டர் நிறுவனங்கள் பயிற்சிக்கான இளைஞர்களைத் தேர்வு செய்தனர். முகாமில் விருத்தாசலம், நல்லூர், காட்டுமன்னார்கோவில், மங்களூர் ஒன்றியங்களைச் சேர்ந்த 565 பேர் பங்கேற்றனர். உதவித் திட்ட அலுவலர் சக்திவேல், உதவித் திட்ட மேலாளர்கள் நாராயணசாமி, நாராயணன், மணிவண்ணன், கலைவாணி மற்றும் ஒன்றிய அணி தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.








Read more »

புதன், மார்ச் 28, 2012

என்.எல்.சி.க்கு தேசிய சுற்றுச்சூழல் விருது

நெய்வேலி:


      நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் சிறந்த சுற்றுச்சூழலைப் பராமரித்து மின்னுற்பத்தி செய்தமைக்காக மத்திய மின்சக்தி அமைச்சகம் தேசிய சுற்றுச்சூழல் விருது வழங்கி கௌரவித்துள்ளது.




   நெய்வேலியில் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் மணிக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த அனல் மின் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழலைப் பராமரிப்பதற்காக ஆயிரக்கணக்கில் மரங்களும், மலர்ச்செடிகளும் வளர்க்கப்பட்டு இயற்கை சூழலாக காட்சியளிக்கிறுது.


     மேலும் இந்த அனல்மின் நிலைய மின்னுற்பத்திக்கு தேவைப்படும் பழுப்பு நிலக்கரி எரிக்கப்பட்ட பின்னர், அதன் சாம்பலை மின்னணுக் கருவிகள் மூலம் சேகரித்து வெளியேற்றும் வசதி இந்த மின் நிலையத்தில் உள்ளது. இந்நிலையில் மத்திய மின்சக்தி ஆணைக் குழுவின் உயர் அதிகாரிகள் கடந்த மாதம் நெய்வேலி வந்து இந்த அனல்மின் நிலையத்தை மதிப்பீடு செய்தனர். தேசிய அளவில் சிறந்த சுற்றுச்சூழலைப் பராமரிக்கும் நிறுவனத்துக்கான வெள்ளிக் கேடய விருதுக்கு என்.எல்.சி. அனல்மின் நிலையத்தைப் பரிந்துரைத்தனர். இதைத் தொடர்ந்து இதற்கான விருது வழங்கும் விழா புதுதில்லியில் மார்ச் 22-ம் தேதி நடைபெற்றது. இதில் மத்திய மின்சக்தித் துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கலந்து கொண்டு சிறந்த சுற்றுச்சூழல் பராமரிப்புக்கான தேசிய விருதின் வெள்ளிக் கேடயத்தை என்.எல்.சி. ஏ.ஆர்.அன்சாரியிடம் வழங்கினார்.


Read more »

கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க கோரிக்கை

கடலூர்:

   அனைத்து பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில், கடலூரில் தெருமுனைப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
 

    அடிக்கல் நாட்டப்பட்ட கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை உடனே தொடங்க வேண்டும். நிதி ஒதுக்கப்பட்டும் தொடங்கப்படாமல் இருக்கும் கடலூர் புறவழிச் சாலை திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். 6 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கிடப்பில் போடப்பட்டு உள்ள சரவணன் நகர் இணைப்புச் சாலைத் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும். 4 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகர்வதால், மக்களுக்கு பல்வேறு இன்னல்களை தந்து வரும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை, விரைந்து முடிக்க வேண்டும். கடலூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க வேண்டும்.



       நெடிய போராட்டத்துக்குப் பின், தொடங்கப்பட்ட கடலூர் ரயில்வே சுரங்கப்பாதை பணி, புதிது புதிதாக காரணங்களைச் சொல்லி, தொடராமல் இருப்பதைக் கண்டித்தும் இந்த தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. கடலூர் பஸ்நிலையம் அருகே தெருமுனைப் பிரசாரத்தை, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எம்.சேகர் தொடங்கி வைத்தார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன், இணை ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

     தெருமுனைப் பிரசாரம், திருப்பாப்புலியூர், கூத்தப்பாக்கம், போடிச் செட்டித் தெரு, முதுநகர், புதுப்பாளையம், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது. மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே பிரசாரத்தை, கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன் முடித்து வைத்துப் பேசினார்.
 

Read more »

கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரியில் கல்லூரி தின விழா


கடலூர்:

         கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் அறிவியல் கலை மற்றும் மேலாண்மையியல் கல்லூரியில் கல்லூரி தின விழா நடந்தது.தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பேராசிரியை நிர்மலா வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரமாமணி ஆண்டறிக்கை வாசித்தார். முதன்மைச் செயல் அலுவலர் ஆனந்த், அறக்கட்டளை செயலர் விஜயகுமார் வாழ்த்திப் பேசினார்.சிறப்பு விருந்தினராக பார்த்தசாரதி, கல்லூரி அறங்காவலர் ஞானசவுந்திரி கல்வித்திறன், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு,சான்றிதழ் வழங்கினார். பேராசிரியை ரேணுகா நன்றி கூறினார்.





Read more »

செவ்வாய், மார்ச் 27, 2012

கடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல்கல்லூரியில்பட்டமளிப்பு விழா


கடலூர்: 

     ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிக் கல்வி வரை, மாணவர்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்க முதல் அமைச்சர் ஜெயலலிதா, பல்வேறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்று ஊரகத் தொழில்கள் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.


கடலூர் புனித வளனார் கல்லூரி 18-வது பட்டமளிப்பு விழாவில் மாணவ மாணவியருக்குப் பட்டங்களை வழங்கி, அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியது:
 

   கிராமப்புற ஏழை எளிய மாணவ மாணவியருக்கும், இக்கல்லூரியில் ஆங்கிலக் கல்வி மற்றும் கணினிக் கல்வி சிறப்பாகக் கற்றுக் கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டின் முன்னேற்றம் இளைஞர்களின் கைகளில் இருக்கிறது. கல்லூரிகள் பாடங்களைக் கற்கும் இடங்களாக மட்டுமன்றி, ஒழுக்கத்தையும் கற்றும்கொள்ளும் இடமாகத் திகழும்போது, பெற்றோர் மகிழ்ச்சி அடைகிறார்கள். மாணவப் பருவத்திலேயே சமூகப் பணி ஆற்றுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. திருவள்ளுவர் பல்கலைக்கழகக் கல்லூரிகளில், விளையாட்டுத் துறையில் சிறந்த மாணவர்களை அதிகமாக இக்கல்லூரி உருவாக்கி இருப்பது பாராட்டத்தக்கது.


         முதலாம் வகுப்பு முதல் கல்லூரிக் கல்வி வரை மாணவர்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்க, பல்வேறு சிறப்புத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். பிளஸ்-1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. பிளஸ்-2 மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை இலவச மடிக்கணினி வழங்க முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். வரும் ஆண்டில் 9.12 லட்சம் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட இருக்கிறது என்றார் அமைச்சர் சம்பத்.  பட்டமளிப்பு விழாவில் 682 மாணவ, மாணவியருக்கு பட்டங்களும், 25 மாணவ, மாணவியருக்கு பல்கலைக்கழக சிறப்புத் தகுதிக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
 

      விழாவுக்கு கடலூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர் அடிகள் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் முனைவர் அருமைச் செல்வம், தேர்வுத்துறை இயக்குநர் பெரியநாயகசாமி, துறைத் தலைவர்கள் சின்னப்பன், ஜெயந்தி ரவிச்சந்திரன், கிறிஸ்டி பெர்டினாண்ட் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
 

Read more »

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் வினாடி வினா


காட்டுமன்னார்கோவில்:

   காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் திறமையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு 4 நாள் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. நான்காம் நாள் கருத்தரங்கில் கம்ப்யூட்டர் துறை மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கை கல்லூரி சேர்மன் கதிரவன் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி பொறியியல் கல்லூரி கம்யூட்டர் துறை பேராசிரியர் ஜெயராஜ், கியூமேக்ஸ் மேலாளர் கிருஷ்ணகுமார், சென்னை குரூப் ஆப் கம்பெனி டாக்டர் லதா பார்த்திபன் உட்பட பலர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். வினாடி வினாவில் பேராசிரியர் நக்கீரன் நடுவராக இருந்தார். மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினர். சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் ஆனந்தவேலு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Read more »

பண்ருட்டி அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததானம் விழிப்புணர்வு கலந்துரையாடல்


பண்ருட்டி :

    பண்ருட்டி அடுத்த அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் ரெட் ரிப்பன் கிளப் சார்பில் எய்ட்ஸ் மற்றும் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது.


  கல்லூரி முதல்வர் சவரிராஜ் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். ரெட் ரிப்பன் கிளப் மாவட்ட மேலாளர் கதிரவன், பண்ருட்டி அரசு மருத்துவமனை ஆலோசகர் ரமாதேவி, மாவட்ட எச்.ஐ.வி., உள்ளோர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் எய்ட்ஸ் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும் ரத்ததானம் வழங்குவதன் அவசியம் குறித்து பேசினர். 
என்.எஸ்.எஸ்., அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.

Read more »

வியாழன், மார்ச் 22, 2012

கடலூர் முதுநகரில் மாற்றுத் திறனாளிகளுக்கான வள மையம் திறப்பு விழா

முதுநகர் :
 
       கடலூர் முதுநகர் அருகே தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வள மையம் திறப்பு விழா நடந்தது.
 
        கடலூர், முதுநகர் அடுத்த மணக்குப்பத்தில் பி.ஏ.எஸ்.எப்., யு.என்.ஹாபிடாட் மற்றும் லியோனார்டு சேஷையர் ஆகிய தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடந்த விழாவிற்கு பி.ஏ.எஸ்.எப்., நிறுவனத் தலைவர் பிரசாத் சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜேந்திர ரத்னு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார். யு.என்.ஹாபிடாட் அமைப்பின் மண்டல தொழில்நுட்ப ஆலோசகர் பூஷண் துலாதர், லியோனார்டு சேஷையர் மாற்றுத்திறன் அமைப்பின் மண்டல கவுன்சில் தலைவர் ஜான் ஆகியோர் பேசினார். விழாவில் டாக்டர் சேகர், அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 

Read more »

புதன், மார்ச் 21, 2012

கடலூர் புனித வளனார் கல்வி நிறுவனங்கள் சார்பில் புனித வளனார் திருவிழா

கடலூர் புனித வளனார் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர் பவனியில் பங்கேற்ற அருள் தந்தையர்கள்.
கடலூர்:

        கடலூர் புனித வளனார் கல்வி நிறுவனங்கள் சார்பில், திங்கள்கிழமை புனித வளனார் திருவிழா கொண்டாடப்பட்டது.

          கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் திருப்பாப்புலியூர் புனித வளனார் கல்வி நிறுவனங்களில் நடந்த இந்த விழாவில், கடலூர் புதுவை மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபை பேராயர் அந்தோனி ஆனந்தராயர் கலந்து கொண்டார்.விழாவை முன்னிட்டு, தூய வளனார் கல்வி நிறுவனங்களில் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடந்தன.இதையொட்டி மாலையில் தேர் பவனியும் நடந்தது. மஞ்சக்குப்பம் புனித வளனார் கல்வி நிறுவன வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிகளில், புனித வளனார் கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர்அடிகள், மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆக்னல் அடிகள் மற்றும் அருள் தந்தையர்கள் பலரும் கலந்து கொண்டனர்.









Read more »

நாள்காட்டியின் உதவியின்றி நாட்களை சொல்லும் நெய்வேலி இளைஞர்

சங்கரநாராயணன்.
நெய்வேலி:

          நெய்வேலியைச் சேர்ந்த எஸ்.சங்கரநாராயணன் (39), நாள்காட்டியின் உதவியின்றி கடந்த ஆண்டோ அல்லது நடப்பாண்டோ அல்லது அடுத்த ஆண்டிலோ ஏதேனும் ஒரு தேதியைக் குறிப்பிட்டு என்ன கிழமை என்றால் தெள்ளத் தெளிவாக, ஓரிரு வினாடிகளில் பதில் தருகிறார். இத்தனைக்கும் இவர் 1-ம் வகுப்போடு படிப்பை மறந்தவர்.இவர் நெய்வேலியை அடுத்த பெரியாக்குறிச்சி பக்தா நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் - மீனாட்சி தம்பதியரின் இளைய மகன். இவரது தந்தை என்.எல்.சி. ஓய்வுபெற்ற ஊழியர். இவரது சகோதரர் சந்திரன், என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர் இளம் வயது முதலே வெகுளித் தனமாக இருந்து வந்துள்ளார். பள்ளிக்கு சரியாக செல்லாததால் படிப்பைக் கைவிட்டுள்ளார்.தற்போது நெய்வேலி மந்தாரக்குப்பம் கடை வீதியில் உள்ள வணிகர்களுக்கு இவர் நன்கு அறிமுகம். இவர் தினந்தோறும் அனைத்துக் கடைகளுக்கும் சகஜமாக சென்று அங்கிருக்கும் தெய்வ உருவப்படங்களுக்கு பூ வைத்துவிட்டு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.மேலும் சில நற்காரியங்களுக்காக புரோகிதர்களுடன் சென்று புரோகிதத்தின்போது உதவிகளை செய்து வருவதால், புரோகிதர்கள் இவருக்கு கை செலவுக்கு சில ரொக்கங்களை வழங்குவர்.சங்கரநாராயணன் வீட்டில் இவரது வருமானத்தை எதிர்பார்ப்பது கிடையாது.இவருக்கு தனிப்பெருமை, அமாவாசை, பெüர்ணமி தினங்களை சரியாகக் கணித்து கூறுவது, கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ம் தேதி என்ன கிழமை? என்று கேட்டால் ஒரு வினாடிக் கூட தாமதிக்காமல் வெள்ளிக்கிழமை என்கிறார்.மேலும் 28-02-2013 என்ன கிழமை? என்று கேட்டால் வியாழக்கிழமை என பதிலளிக்கிறார். அதேபோன்று 13-09-2011 என்ன கிழமை? என்றால் செவ்வாய்க்கிழமை என பட்டென பதிலளிக்கிறார்.ஒருசிலர் இவரை சற்று மனநலம் குன்றியதாக கூறியபோதும், அவ்வாறு இல்லாமல் வெகுளித் தனமாகவே காட்சியளிக்கும் இவர், விநாயகர் பூஜையை சிறப்பாக செய்து வருகிறார் என்கின்றனர் மந்தாரக்குப்பம் வணிகர்கள்.

Read more »

நாள்காட்டியின் உதவியின்றி நாட்களை சொல்லும் நெய்வேலி இளைஞர்

சங்கரநாராயணன்.
நெய்வேலி:

          நெய்வேலியைச் சேர்ந்த எஸ்.சங்கரநாராயணன் (39), நாள்காட்டியின் உதவியின்றி கடந்த ஆண்டோ அல்லது நடப்பாண்டோ அல்லது அடுத்த ஆண்டிலோ ஏதேனும் ஒரு தேதியைக் குறிப்பிட்டு என்ன கிழமை என்றால் தெள்ளத் தெளிவாக, ஓரிரு வினாடிகளில் பதில் தருகிறார். இத்தனைக்கும் இவர் 1-ம் வகுப்போடு படிப்பை மறந்தவர்.இவர் நெய்வேலியை அடுத்த பெரியாக்குறிச்சி பக்தா நகரைச் சேர்ந்த சுப்ரமணியன் - மீனாட்சி தம்பதியரின் இளைய மகன். இவரது தந்தை என்.எல்.சி. ஓய்வுபெற்ற ஊழியர். இவரது சகோதரர் சந்திரன், என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவர் இளம் வயது முதலே வெகுளித் தனமாக இருந்து வந்துள்ளார். பள்ளிக்கு சரியாக செல்லாததால் படிப்பைக் கைவிட்டுள்ளார்.தற்போது நெய்வேலி மந்தாரக்குப்பம் கடை வீதியில் உள்ள வணிகர்களுக்கு இவர் நன்கு அறிமுகம். இவர் தினந்தோறும் அனைத்துக் கடைகளுக்கும் சகஜமாக சென்று அங்கிருக்கும் தெய்வ உருவப்படங்களுக்கு பூ வைத்துவிட்டு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.மேலும் சில நற்காரியங்களுக்காக புரோகிதர்களுடன் சென்று புரோகிதத்தின்போது உதவிகளை செய்து வருவதால், புரோகிதர்கள் இவருக்கு கை செலவுக்கு சில ரொக்கங்களை வழங்குவர்.சங்கரநாராயணன் வீட்டில் இவரது வருமானத்தை எதிர்பார்ப்பது கிடையாது.இவருக்கு தனிப்பெருமை, அமாவாசை, பெüர்ணமி தினங்களை சரியாகக் கணித்து கூறுவது, கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3-ம் தேதி என்ன கிழமை? என்று கேட்டால் ஒரு வினாடிக் கூட தாமதிக்காமல் வெள்ளிக்கிழமை என்கிறார்.மேலும் 28-02-2013 என்ன கிழமை? என்று கேட்டால் வியாழக்கிழமை என பதிலளிக்கிறார். அதேபோன்று 13-09-2011 என்ன கிழமை? என்றால் செவ்வாய்க்கிழமை என பட்டென பதிலளிக்கிறார்.ஒருசிலர் இவரை சற்று மனநலம் குன்றியதாக கூறியபோதும், அவ்வாறு இல்லாமல் வெகுளித் தனமாகவே காட்சியளிக்கும் இவர், விநாயகர் பூஜையை சிறப்பாக செய்து வருகிறார் என்கின்றனர் மந்தாரக்குப்பம் வணிகர்கள்.

Read more »

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டம் இணையதளத்தில் வெளியீடு

      ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
 
  ஆசிரியர் தேர்வு வாரியத்தின்    http://www.trb.tn.nic.in/ 
 
          என்ற இணையதளத்தில் பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 3-ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 22-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளை எழுதலாம். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளை எழுதலாம். 
 
          ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோர் இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.இந்த இரண்டு தாள்களிலும் 150 மதிப்பெண்ணுக்கு "மல்டிபிள் சாய்ஸ்' வடிவில் வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இதில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். முதல் தாளுக்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களிலிருந்து பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தாளுக்கு 6 முதல் 12 வகுப்பு வரையான பாடப் புத்தகங்களிலிருந்து பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
 
          1 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள பாடப் புத்தகங்களை முழுமையாகப் படித்தால் இந்தத் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைய வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 
பாடத் திட்ட விவரம்: 
 
       ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பிக்கும் முறை, மொழிப் பாடம் முதல் தாள், மொழிப் பாடம் இரண்டாம் தாள் (ஆங்கிலம்), கணிதம், சுற்றுச்சூழலியல் மற்றும் அறிவியல் பாடங்களிலிருந்து தலா 30 மதிப்பெண்ணுக்கான வினாக்கள் இடம்பெறும்.
 
           இரண்டாம் தாளில் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பிக்கும் முறை, மொழிப் பாடம் முதல் தாள், மொழிப் பாடம் இரண்டாம் தாள் (ஆங்கிலம்) பாடங்களிலிருந்து தலா 30 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படும். கணிதம் மற்றும் அறிவியல், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு அந்தந்தப் பாடங்களில் இருந்து மட்டும் தலா 60 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் கேட்கப்படும். பிற பாட ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒரு தாளை தேர்ந்தெடுத்து எழுதலாம்.
 
நாளை முதல் விண்ணப்பம்: 
 
         தமிழகம் முழுவதும் உள்ள 66 மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வியாழக்கிழமை (மார்ச் 22) முதல் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 8 லட்சம் விண்ணப்பங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.  இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வழங்குவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 4 ஆகும். விண்ணப்பக் கட்டணம் ரூ.50.
 
 
 
 
 
 
 
 

Read more »

தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட பெண்களுக்கு தொழில் உதவி

        கடலூர் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட 900 பெண்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 1 லட்சம் டாலர் நன்கொடை வழங்கவிருப்பதாக வால்மார்ட் நிறுவனம் அறிவித் துள்ளது.

       இந்த நன்கொடை மூலமாக வால்மார்ட் பவுண்டேசன் மற்றும் கேர், கடலூர் பகுதியில் முந்திரி செயல்முறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கும், நீடித்திருக்கும் முந்திரி சாகுபடி நடைமுறை கள் மேம்படுத்தப்படும். மேலும் பாதிக்கப்பட்ட முந்திரி செயல்முறை கட்டமைப்பினை மீள்ப்படுத்தி, அதன் மூலம் நீடித்திருக்கக் கூடிய வாழ்வாதாரத்தை மீட்பதற்கு எண் ணியுள்ளன. குப்பைகளை அகற்றுதல், முந்திரி மரம் நடுவ தற்காக நிலத்தை தயார்படுத்துதல், சிறு விவசாயிகளுக்கு உதவுதல் ஆகிய பணிகளும் இதில் அடங்கும்.

 இதுகுறித்து வால்மார்ட நிறுவனத்தின் நிருவாக இயக்குநர் ராஜ் ஜெயின்அளித்த பேட்டி

         கடலூர் மிகப் பெரிய அளவில் முந்திரி விவசாயம் மற்றும் செயல்முறை நடவடிக்கைகளை கொண்டுள்ளது. தானே புயலால் கடலூர் பெரிதளவில் பாதிக்கப் பட்டுள்ளது. சுமார் 47 உயிர்களை பலி வாங்கியதுடன், 735 கிராமங்களில் சுமார் 5 லட்சம் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் முந்திரி பயிரிடு பவர்கள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய பணியாளர் களின் திறனை மீண்டும் உருவாக்க முடிவு செய்துள் ளோம். சுமார் 900 பெண்கள் உள்பட 3600 பேர் இதன் மூலம் பயனடைய உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.






Read more »

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் நிர்ணயம்

நெய்வேலி:
 
       என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.15 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என பிஎம்எஸ் தொழிற்சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
         பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு மார்ச் மாத தொடக்கத்தில் கரூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் நெய்வேலி பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் செயலராக இருந்த என்.இளங்கோவன், மாநிலச் செயலராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சரவணபவன் அறிவித்தார். இந்த மாநாட்டின் போது, நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் உருவாக காரணமாகத் திகழ்ந்த ஜம்புலிங்க முதலியாருக்கு ஒரு சிலையையும், தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்களின் கடவுளாகக் கருதப்படும் பொன்.முத்துராமலிங்கத் தேவருக்கும் நெய்வேலியில் சிலை அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக என்.இளங்கோவன் தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

செவ்வாய், மார்ச் 20, 2012

கடலூர் தாலுகாவில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு பயோ மெட்ரிக் கார்டு வழங்கும் பணி

நெல்லிக்குப்பம் :

      கடலூர் தாலுகா காராமணிக்குப்பம், வெள்ளப்பாக்கம் பகுதிகளில் பயோ மெட்ரிக் கார்டு வழங்கும் பணி நடந்தது.
 
 
      தமிழகம் முழுவதும் முதியோர், மாற்றுத் திறனாளி, விதவை உதவித் தொகைகள் தபால் நிலையம் மூலம் வழங்கப்படுகிறது. இதில் நடக்கும் காலதாமதம், முறைகேடுகளை தவிர்க்க பயோ மெட்ரிக் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 4,000 மக்கள் தொகைக்கு மேல் உள்ள கிராமங்களில் முதல் கட்டமாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. பயனாளியின் 10 கை விரல் ரேகை பதிவு செய்யப்பட்ட கார்டு வழங்கப்படும். வங்கியின் தொழில் பரிவர்த்தனை அலுவலர் அந்தந்த கிராமங்களுக்கு குறிப்பிட்ட நாளில் வருவார்கள். ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுப்பது போல் இந்த நபர் எடுத்துவரும் இயந்திரத்தில் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம் பயனாளிகள் சிரமம் தவிர்க்கப்படும் இதற்கான பயோ மெட்ரிக் கார்டு வழங்கும் பணியை வெள்ளப்பாக்கத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மோகன் துவக்கி வைத்தார். வி.ஏ.ஓ., பாஸ்கரன் உடனிருந்தார்.
 
 
 
 
 

Read more »

திங்கள், மார்ச் 19, 2012

இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

விருத்தாசலம்:
 
        இலங்கை அரசின் மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விருத்தாசலத்தில் கல்லூரி மாணவர்கள் சனிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து மறியலில் ஈடுபட்டனர். 
 
       இதேபோல், திராவிடர் மாணவர் கழகத்தினர் ராஜபட்சவின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் சிங்கள ராணுவம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது தொடர்பாக, அமெரிக்கா அரசு ஐ.நா. மன்றத்தில் இலங்கை அரசின் மீது மனித உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 
        பின்னர், கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.திராவிடர் மாணவர் கழகம்: விருத்தாசலம் பாலக்கரையில் திராவிடர் கழக மாணவரணியினர் இந்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இலங்கை அதிபர் ராஜபட்சவின் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில மாணவரணி துணைச் செயலர் த.சீ.இளந்திரையன் தலைமை ஏற்றார்.மாவட்ட துணைச் செயலர் முத்து.கதிரவன் கண்டன உரையாற்றினார். மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்டச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ப.க. செயலர் செழியன், நகரத் தலைவர் சுப்பிரமணியன், ஒன்றியத் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 

Read more »

கடலூர் பாடலேசுவரர் தொழில்நுட்பக் கல்லூரியில் எ ய்ட்ஸ் நோய் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி

கடலூர் : 
 
         கடலூர் பாடலேசுவரர் தொழில்நுட்பக் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சார்பில் எய்ட்ஸ் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி நிறுவனத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். முதல்வர் ரமேஷ் பாபு வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்ட மேலாளர் கலைமதி முன்னிலை வகித்தார். செஞ்சுருள் சங்க மாவட்ட மேலாளர் கதிரவன், கல்லூரி துணை முதல்வர் ராஜ்குமார், நிர்வாக அதிகாரி டைட்டஸ் டேவிட் ஆகியோர் பேசினர். செந்தில்முருகன், ரவி, சண்முகம் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடி சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
 
 
 
 
 
 

Read more »

கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா

கடலூர் : 

        கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். மகளிர் திட்ட கண்காணிப்பாளர் மனோகரன் வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர்கள் மாலதி, காஞ்சனா, தேவதாஸ் பொன்னையா சிறப்புரையாற்றினர். கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். உதவி திட்ட அலுவலர் ஜெயராமன் நன்றி கூறினார். 










Read more »

ஞாயிறு, மார்ச் 18, 2012

திருமாந்துறையில் சிவன் கோவில் பிரசாதத்தை சாப்பிட்ட 18 பேருக்கு வாந்தி-பேதி

 http://mmimages.mmnews.in/Articles/2012/Mar/83a9f3dc-7d16-4e9e-ac6c-20aad90ee793_S_secvpf.gif
 
திட்டக்குடி:
 
         திட்டக்குடியை அடுத்த திருமாந்துறையில் உள்ள சிவன் கோவிலில் திருவிழா நடந்தது. இந்த விழாவில் திரளான ஆண்-பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அங்கனூரை சேர்ந்த கிராமத்தினர் சிலர் அந்த கோவில் பிரசாதத்தை பெற்று கொண்டு இரவில் வீடு திரும்பினார்கள்.   
 
      காலையில் அந்த பிரசாதத்தை சாப்பிட்ட தமிழ்ச்செல்வி (வயது 38), பூங்கா (29), ஆனந்தி (25), அமுதா (28), அனுசுயா (20), சந்துரு உள்பட 18 பேருக்கு வாந்தி-பேதி ஏற்பட்டு மயக்கமடைந்தனர். அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவர்களை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.   இது பற்றி தகவல் அறிந்த மருத்துவ அலுவலர் மோகன் அங்கனூர் கிராமத்துக்கு விரைந்து சென்றார். வாந்தி-மயக்கத்துக்கு காரணமான பிரசாதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

சனி, மார்ச் 17, 2012

அரசுப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் தொடக்கம்

கடலூர்:

         அரசுப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு, விண்ணப்ப மனுக்கள் விநியோகம், கடலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

           தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,894 பேர் நியமனம் செய்யப்பட இருக்கிறார்கள். இவர்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்ய இருக்கிறது. இதற்கான எழுத்துத் தேர்வு மே 27-ம் தேதி நடைபெற இருக்கிறது. எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் விநியோகம், கடலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ. 50. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து, அங்கேயே சமர்ப்பிக்க வேண்டும்.

          விண்ணப்பப் படிவங்கள் விநியோகத்துக்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிப்பதற்கும் வருகிற 30-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்கள் விநியோகத்தை, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எம்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.










Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior