கடலூர் :
கடலூர் மத்திய சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட கைதி, கொலை செய்யப் பட்டாரா என்ற கோணத்தில் ஆர்.டி.ஓ., மறுவிசாரணை துவங்கியுள்ளது.சென்னை புளியந் தோப்பு, கனக நாராயண முதலியார் தோப்பை சேர்ந்தவர் பழனி மகன் அமுல் என்கிற அமுல்பாபு (29). திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக் குகளில் சம்பந்தப்பட்ட இவரை, புளியந்தோப்பு போலீசார் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர். அங்கு அவர், சிறை ஊழியர்களிடம் கஞ்சா கேட்டு தகராறு செய்ததால், கடந்த ஜூலை 14ம் தேதி கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.கடந்த ஆக., 3ம் தேதி இரவு கஞ்சா கேட்டு சுவற் றில் தலையை மோதிக் கொண்டு மயங்கி விழுந் தார்.
அவரை, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.மத்திய சிறை கண்காணிப்பாளர் ஜெயராமன் புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்தனர். கடலூர் ஆ.டி.ஓ., செல்வராஜ், கைதியின் உறவினர்கள், சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.இந்நிலையில், பிரேத பரிசோதனையில் அமுல் பாபுவின் விலா எலும்புகள் உடைந்துள்ளது தெரிய வந்தது. அதனால், கைதி அமுல்பாபு சிறையில் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் ஆர்.டி.ஓ., மறுவிசாரணை நடத்தி வருகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக