பரங்கிப்பேட்டை :
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மீதான தேர் தல் விதிமுறை மீறல் வழக்கு வரும் பிப்., 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெ., 2006ம் ஆண்டு நான்கு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார். தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என, சுப்ரீம் கோர்ட்டில் ஜெ., தடை உத்தரவு பெற்றார். இதனால், பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இதுவரை 26 தடவை, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வசந்தி, பிப்., 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக