பண்ருட்டி :
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரில் உயிர் காக்கும் உயர் சிகிச்சை மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் வரும் 25ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து மருங்கூர் வட்டார மருத்துவ அலுவலர் தனசேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
பண்ருட்டி அடுத்த மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காடாம்புலியூரில் வரும் 25ம் தேதி தமிழக அரசின் உயிர் காக் கும் உயர் சிகிச்சைக்கான மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம் வரும் 25ம்தேதி நடக்கிறது. இதில் இருதயம், புற்றுநோய், சிறுநீரகம், மூட்டு அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை,பிறவி குறைபாடு, கர்ப்பப்பை நோய், தைராய்டு, இரப்பை, குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் உள்ளிட்ட 51வகையான நோய்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை முகாம் நடக்கிறது.
இதில் புதுச்சேரி பிம்ஸ் ஆஸ்பிட்டல், வெங்கடேஸ்வரா, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, கடலூர் அபிராமி, எஸ்.ஆர்.ஆஸ்பிட்டல் ஆகிய மருத்துவமனை குழுவினர் பங்கேற்று சிகிச்சை அளிக்க உள்ளனர். தேர்வு செய்யும் நோயாளிகள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வரை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பயனாளிகள் பட்டியலில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக