கடலூர் :
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கவுரவ விரிவுரையாளர்கள் குடும்பத்துடன் நேற்று கடலூரில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.அரசு கலைக் கல்லூரிகளில் சுயநிதிப் பிரிவாக துவங்கி அரசு பாடப்பிரிவாக மாற்றப்பட்ட வகுப்புகளுக்கு நியமித்த 977 கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை அடிப்படை ஊதியமாக 15,600 ரூபாய் வழங்க வேண்டும். சுயநிதிப் பாடப் பிரிவாக இருந்து அரசு பாடப்பிரிவாக மாற் றப்பட்ட பாடப் பிரிவுகளுக்கு, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 998 உதவி பேராசிரியர் பணியிடங்களில் கவுரவ விரிவுரையாளர்களையே பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது; உரிய பணி பாதுகாப்பும், அடிப்படை சலுகைகளும் வழங்க வேண்டும்; கிராமப்புற மாணவர்கள் பயன் பெறும் வகையில், ஒவ் வொரு சட்டசபை தொகுதியிலும் புதிய அரசு கல்லூரிகள் துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கவுரவ விரிவுரையாளர்கள், தமிழகத்தில் சேலம், திருச்சி, திருப்பூர், திருவாரூர், மதுரை, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய இடங்களில் குடும்பத்தினருடன் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக