கடலூர் :
புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என கடலூர் நகர ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கம் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துள்ளது.
இது குறித்து கடலூர் நகரத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடலூர் நகரில் 5,000 பெட்ரோல் ஆட்டோக்கள், 50 ஷேர் ஆட்டோக்கள், 500 அபே ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. மேலும் டி.வி.எஸ்., மகேந்திரா ஆட்டோக்களும் குவிந்து வருகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது. இது குறித்து பல்வேறு மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இனி புதிதாக வரும் ஆட்டோக்களுக்கு "பதிவுச் சான்று' வழங்க வேண்டாம். இது குறித்து நடவடிக்கை இல்லையெனில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட் டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக