கடலூர் :
கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வேல்ஸ் பல்கலைக் கழக அணி முதல் இடத்தை பிடித்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கைப்பந்து போட்டி கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் கடந்த 19ம் தேதி துவங்கியது. 20 கல்லூரிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சென்னை வேல்ஸ் பல்கலைக் கழக அணி முதலிடத்தையும், சத்யா பல்கலைக்கழக அணி இரண்டாம் இடத்தை பிடித்தன.பரிசளிப்பு விழாவிற்கு செயின் ஜோசப் கல்லூரி செயலாளர் ரட்சகர் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் அக்னல் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்தியநாதன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார். விழாவில் ரோட்டரி ரவிச்சந்திரன், மாநில கபடி கழக துணைத் தலைவர் வேலவன், மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி., அரிகிருஷ்ணன், புதுநகர் இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டி ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ராஜமாணிக்கம், துறைத்தலைவர்கள் ஜெயந்தி ரவிச்சந்திரன், சின்னப்பன், சூசை, ரொசாரியோ, அருமைச் செல்வன், பெரியநாயகசாமி, ஜோன் ஆரோக்கியராஜ், செயின்ட் அலேக் சிஸ், கிறிஸ்டி பெர்டினான்ட், மேலாளர் அந் தோணிராஜ், மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் முரளிதாஸ் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக