திட்டக்குடி :
பெண்ணாடத்தில் தொடக்கப்பள் ளிக்கு முன்புறம் கரும காரிய நிகழ்ச்சிகள் நடப்பதால் மாணவர்கள் படிப்பு பாதிக்கிறது. பெண்ணாடம் பகுதியில் இறந்தவர்களுக்கு பேரூராட்சி 3வது வார்டு அய்யனார் கோவில் தெருவில் உள்ள பொது இடத்தில் கரும காரியம் செய்து வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தில் நல்லூர் ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டப்பட்டது. இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி இயங்கி வந்தபோதிலும், பெண்ணாடம் பேரூராட்சி 2,3 மற்றும் 4 வார்டுகளில் எவரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கான கரும காரியம் பள்ளியின் முன்பாகவே நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியே பாடம் நடத்தினாலும் அதனை மாணவர்கள் கவனிக்க முடியாத நிலை உள்ளது. இதனை தவிர்த்திட அதே பகுதியில் உள்ள குளக்கரையில் கரும காரியம் செய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக