உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 23, 2010

சுகாதார மேற்பார்வையாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி

விருத்தாசலம் : 

                நர்சை ஆபாசமாக திட்டி தாக்கிய சுகாதார மேற் பார்வையாளருக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அளித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை விருத்தாசலம் விரைவு கோர்ட் உறுதி செய்தது.

              கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்தவர் பாண்டியன்(55). மங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். அதே இடத்தில் நர்சாக பணி புரிந்தவர் சுமதி (48). கடந்த 2007ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி எஸ்.நாறையூர் கிராமத்தில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. அப்போது பணிக்கு வந்த கிராம செவிலியர்களை தனித்தனி பணி இடத்திற்கு பிரித்து அனுப்பும் பணியில் நர்ஸ் சுமதி ஈடுபட்டிருந்தார். அங்கு வந்த மேற்பார்வையாளர் பாண்டியன்,"உன்னை யார் இந்த வேலையை செய்ய சொன்னது' என கூறி நர்ஸ் சுமதியை ஆபாசமாக திட்டி பொதுமக்கள் முன்னிலையில் தாக்கினார். தடுக்க வந்த மருந்தாளுனர் சீனுவாசனையும் ஆபாசமாக திட்டினார்.
                     இதுகுறித்து நர்ஸ் சுமதி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியனை சிறுபாக்கம் போலீசார் கைது செய்தனர். அவர் மீது விருத்தாசலம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் அருள்மொழிச்செல்வி, நர்ஸ் சுமதியை தாக்கிய சுகாதார மேற் பார்வையாளர் பாண்டியனுக்கு இரண் டாண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கடந்தாண்டு ஏப்.28ம் தேதி தீர்ப்பு கூறினார். அதனை எதிர்த்து பாண்டியன், விருத்தாசலம் விரைவு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தேவசகாயம், பாண்டியனுக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior