உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 23, 2010

காட்டுமன்னார்கோவில் அருகே பன்றிகள் அட்டகாசம் : அறுவடைக்கு தயாரான விவசாய நிலங்கள் பாதிப்பு

காட்டுமன்னார்கோவில் : 

                காட்டுமன்னார்கோவில் பகுதியில் அறுவடைக்கு தயாராக உள்ள நிலங்களில் பன்றிகள் புகுந்து நாசம் செய்வதால் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.

                 காட்டுமன்னார்கோவில் குப்பங்குழி பகுதியில் அதிகளவு பன்றிகள் வளர்க்கப்படுகிறது. இவைகள் குடியிருப்பு பகுதிகளிலும், விளை நிலங்களிலும் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் முறையிட்டதன் பேரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பன்றிகளை சுட உத்தரவிடப்பட்டது.  அதனை தொடர்ந்து மூன்று நாள் பன்றிகள் சுடப்பட்டது. உடன் பன்றி வளர்ப்போர் தங்களது பன்றிகளை லாரியில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். பன்றிகளை சுட பேரூராட்சி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு கடந்த 10ம் தேதியுடன் முடிந்தது. இதனை அறிந்த பன்றி வளர்ப்போர் மறுநாளே குப்பங்குழி பகுதிக்கு பன்றிகளை ஓட்டி வந்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலங்களில் பன்றிகள் இறங்கி நெற் கதிர்களை கடித்து குதறி நாசம் செய்வதால் விவசாயிகள் கடுமையாக பாதிப் படைந்து வருகின்றனர்.
  
                   இதுகுறித்து அப்பகுதி மக்கள் பேரூராட்சி மற்றும் போலீசில் புகார் செய்துள்ளனர்.  அதன்பேரில் பன்றிகளை சுட மாவட்ட நிர்வாகத்திடம் உத்தரவு பெற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆனால் அவர்களின் முயற்சி வெற்றி அடைவதற்குள் விவசாய நிலங்களை முற்றிலுமாக பன்றிகள் அழித்து விடும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர். ஆகவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பன்றி உரிமையாளர்களிடம் பேசி பன்றிகளை விவசாய நிலங்களிலும், ஊர் பகுதிகளிலும் விடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior