உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

மாவட்டத்தில் 11 ஆயிரம் ரேஷன் கார்டுகள் நீக்கம் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதி


கடலூர்: 

                     கடலூர் மாவட்டத்தில் நீக்கம் செய்யப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களில் 11 ஆயிரத்து 364 மேல் முறையீடு மனுக்கள் மீது இன்னும் விசாரணை முடிவடையாத நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு இறுதியில் ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்து போலி கார்டுகள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.  அதில் தகுதி உள்ள கார்டுகள் அதிகம் நீக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் வந்ததால், ரேஷன் கார்டு ஆய்வு பணி நிறுத்தப்பட்டது.  மேலும் நீக்கம் செய்த கார்டுகளுக்கு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுத்ததோடு, பொருட்களும் வழங்க உத்தரவிடப்பட்டது.  தேர்தல் முடிந்ததும், மீண்டும் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியும் பணி நடந்தது.  இதில் கடலூர் மாவட் டத்தில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 722 கார்டுகள் போலி என கண்டறியப்பட்டது.

                   இறுதியாக 66 ஆயிரத்து 139 கார்டுகள் நீக்கம் செய்து கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.  இந்த முறையும் ஒரே இடத்தில் பல ஆண்டாக  வசிப்பவர்களின் ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டதால் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.  பாதிக்கப்பட்ட பொது மக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு படையெடுத்து 11 ஆயிரத்து 364 பேர் மேல் முறையீடு செய்துள்ளனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் பொருட்கள் வழங்கவில்லை. முறையீடு மனு செய்தவர்கள் தாலுகா  அலுவலகங்களில் சென்று கேட்டால் விசாரணைக்கு வருவார்கள் என கூறுகின்றனர்.   ஆனால் பெரும்பாலான  இடங்களில் விசாரணை செய்யப்படாமல் உள்ளது.  இதனால் ரேஷன் கார்டுகளை கொண்டு பொருட்களை வாங்க  முடியாமல் பொதுமக்கள் தினம், தினம் தாலுகா அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து வருவது வேதனையாக உள்ளது.

                        இந்த பிரச்னையில் கலெக்டர் தலையிட்டு உரிய முறையில் விசாரணை நடத்தி தகுதி உள்ள ரேஷன் கார்டுகளுக்கு  பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior