சிறுபாக்கம்:
வேப்பூர் - சேலம் சாலையில் பேட்ஜ் ஒர்க் பணி துரிதமாக நடந்து வருகின்றது. விருத்தாசலம்- சேலம் நெடுஞ்சாலை வழியாக சிதம்பரம், மயிலாடுதுறை, ஈரோடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு இரவு பகலாக ஆயிரக்கணக் கான கனரக வாகனங்கள், டூ- வீலர்கள் சென்று வருகின்றன. இதில் வேப்பூரிலிருந்து கடலூர் மாவட்ட எல்லையான அரசங்குடி வரையிலான 20 கிலோ மீட்டர் தார்சாலை பழுதடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதியடைந்தனர்.

இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து சாலையை பார்வையிட்ட நெடுஞ் சாலை துறை அதிகாரிகள், குண்டும் குழியுமான சாலையை தற்காலிகமாக சீரமைக்க உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து தற்போது "வேப்பூர்-சேலம் சாலையில் "பேட்ஜ் ஒர்க்' நடந்து வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக