கடலூர்:
கடைகளில் சோதனை என்ற பெயரில் கடலூர் நகராட்சி உணவு ஆய்வாளர்கள் முறைகேடாக நடந்து கொள்வதாக கடலூர் மளிகைக்கடை நடத்துவோர் உள்ளிட்ட சிறு வணிகர்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.கடலூர் நகராட்சி பகுதிகளில் மளிகைக்கடை உள்ளிட்ட சிறு வணிகம் செய்யும் செல்லப்பாண்டியன், ஆனந்த், முருகன், பாலு, கபாலீஸ்வரன் உள்ளிட்ட வணிகர்கள் மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செல்லப் பாண்டியன் கூறியது:
உணவு ஆய்வாளர்கள் தங்களுடன் 4,5 பேரை அழைத்துவந்து சிறு வணிகர்களை மிரட்டுகிறார்கள். பாலித்தீன் பைகள் உபயோகத்தைக் குறைக்க வேண்டும் என்று அரசு விரும்பும் போது, அனைத்து பொருள்களும் பாலித்தீன் பாக்கெட்டுகளில்தான் விற்பனை செய்ய வேண்டும் என்கிறார்கள். சிறு வியாபாரத்தில் காகிதங்களில் பொட்டலமிட்டுத் தான் கொடுக்க முடியும். ஆன்லைன் வர்த்தகம், மற்றும் பெரு முதலீட்டில் நடைபெறும் டிப்பார்ட் மெண்டல் ஸ்டோர்கள் நடக்கும் போது, சிறு வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டு நலிவடைந்து வருகிறது. வங்கிளும் கடன் அளிப்பது இல்லை. இந்த நிலையில் சோதனை என்ற பெயரில் சில அதிகாரிகள் வந்து பொருள்களை மாதிரிக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
சிறு தவறுகளுக்கும் வழக்குத் தொடர்ந்து பெரிதும் சங்கடத்தை ஏற்படுத்துகிறார்கள். பெரிய கடைகளுக்கும், டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்களுக்கும், உள்ளூரில் செல்வாக்கு மிக்கவர்களது கடைகளுக்கும் இவர்கள் செல்வதில்லை. சென்றாலும் வழக்குகள் போடுவதில்லை. கண்டும் காணால் விட்டு விடுகிறார்கள். சாதாரண சிறு வணிகர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து சிறுசிறு கடை வைத்து இருப்போர் ஆகியோரிடம்தான் இவர்கள், தங்கள் அதிகாரங்களைக் காட்டி மிரட்டுகிறார்கள். சாதாரணத் தவறுகளுக்கு பெரும் தொகையை லஞ்சமாக கொடுக்க வேண்டியது இருக்கிறது; அல்லது நீதிமன்ற படிக்கட்டுகளை பலகாலம் ஏறி இறங்க வேண்டியது இருக்கிறது.விலை உயர்ந்த பொருள்களையும் தங்கள் சொந்த உபயோகத்துக்கு இலவசமாக எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் சிறு வணிகர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இவர்களின் முறையற்ற செயல்களால் வியாபாரத்தை விட்டுவிட்டுச் சென்ற சிறுவணிகர்கள் பலர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக