உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

பிளஸ் 2 கணித கேள்வித்தாள் பற்றாக்குறை: 40 நிமிடம் தாமதமாக துவங்கியது தேர்வு


கடலூர்: 

                    கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு மையத்தில் கணித கேள்வித்தாள் பற்றாக் குறை காரணமாக, 40 நிமிடம் தாமதமாக தேர்வு துவங்கியது. கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 தேர்வு மையமாக உள்ளது. இங்கு, அதே பள்ளி மற்றும் பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். நேற்று கணிதம் மற்றும் விலங்கியல் தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு தேர்வு துவங்க மணி அடித்தும், கேள்வித்தாள் பார்சல் பிரித்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதில், கணிதப் பாடத்திற்கு 37 கேள்வித் தாள் குறைவாக இருந்தது. இதனால்,  மாணவர்கள் 31 பேருக்கு கேள்வித்தாள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சி.இ.ஓ.,விற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

              உடனடியாக கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் இருந்து அவசரமாக 31 வினாத்தாள்கள் எடுத்துச் சென்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த குளறுபடியால், பத்திரக்கோட்டை பள்ளியைச் சேர்ந்த 31 மாணவர்களும் 40 நிமிடம் தாமதமாக தேர்வு எழுதத் துவங்கினர். ஆனால், இவர்களுக்கு கூடுதலாக 15 நிமிடம் மட்டுமே வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவரிடமும் கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பினர்.

                    தேர்வின் போது கேள்வித்தாள்கள் எண்ணிக்கை குறிப்பிட்டு அனுப்பப்படும். குறையும் கேள்வித்தாள்கள் வேறு மையத்திற்கு அனுப்பினால் மட்டுமே பற்றாக்குறை ஏற்படும். ஆனால், வேறு தேர்வு மையத்திற்கும் அனுப்பாத நிலையில், வருகை தராத தனித் தேர்வர்களுக்கு வழங்க வேண்டிய கேள்வித்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படியானால், கடந்த தேர்வுகளின் போது சரியான எண்ணிக்கையில் இருந்த கேள்வித் தாள்கள், கணிதத்தில் மட்டும் குறைந்த காரணம், சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பணி விடுவிப்பு: கேள்வித்தாள் பற்றாக்குறையால் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அந்த தேர்வு மையத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த தலைமை கண்காணிப்பாளர் ஜானகிராமன், துறைத் தலைவர் சுந்தரமூர்த்தி, டம்மி எண்களுக்கான தேர்வு தலைமை கண்காணிப்பாளர் சுப்ரமணியன் ஆகியோர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு பதில் வேறு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior