திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் வட்டத்துக்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு சொந்தமான பெரும்பாலான சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் ஆண்டுகணக்காய் கிடக்கிறது. இதனால் கிராமப்புற மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.திருக்கோவிலூர் மற்றும் முகையூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பெரும்பாலான கிராமப்புறச் சாலைகள் பழுதடைந்த நிலையில் ஆண்டுகணக்காய் கேட்பாரற்று கிடப்பதை போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் மக்கள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

இதில் குறிப்பாக திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் வழியாக நெற்குணம், ஏமபேர் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லக்கூடிய சாலை 5 ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்த நிலையில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூராக இருந்து வருகிறது. போக்குவரத்துக்கு வசதியாக தரமானதாக இருந்து வந்த இச்சாலை 5 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் தெண்பெண்ணை ஆற்றில் மணல் குவாரியை தமிழக அரசு கொண்டு வந்தததின் பேரில், அன்றாடம் நூற்றுக்கணக்கான லாரிகள் இந்த வழித்தடத்தில் மணலை ஏற்றிச் சென்றதால்தான் இச்சாலை இந்த அளவிற்கு காணப்படுவதாக மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்குச் சொந்தமான இச்சாலையை செப்பனிட இதுவரையில் நடவடிக்கை எடுக்காததால் இப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகள் அன்றாடம் தவியாய் தவித்து வருகின்றனர்.அதேபோல் காலை, மாலை என 2 நடைகள் மட்டுமே இந்த வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால் போதிய பஸ் வசதியில்லாத நிலையில் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கால்நடைகளாய் நடந்தும், இரு சக்கர வாகனங்கள் மூலமும் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கோவிலூருக்கு செல்ல வேண்டியுள்ளது.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் (கி.ஊ) முகமது ஷாஜகானிடம் கேட்டபோது, பழுதடைந்துள்ள நெற்குணம், ஏமப்பேர் சாலையை கனிம வள நிதியின் மூலம் செப்பனிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணி வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக