உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் ரூ.16 கோடி ஒதுக்கீடு கலெக்டர் சீத்தாராமன் தகவல்


கடலூர்: 

        மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு மானியமாக 16.04 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:   

                     உள்ளாட்சி  அமைப்புகளுக்கு தமிழக அரசு தன் சொந்த வருவாயிலிருந்து குறிப்பிட்டதொகையை மாநில நிதிக்குழு மானியமாக வழங்குகிறது. கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களின் மக்கள் தொகை அடிப்படையில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.  ஒன்றியங்களுக்கு குறைந்தபட்ச மானியமாக 30 லட்சம் ரூபாயை, மாதம் 2.50 லட்சம் என பிரதி மாதம் வழங்கப்படுகிறது. கிராம ஊராட்சிகளுக்கு ஆண்டிற்கு மூன்று லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டத் திற்கு கடந்த 2009-2010ம் ஆண்டின் ஏப்ரல் 2009 முதல் ஜனவரி 2010  முடிய பத்து மாதங்களுக்கு 40 கோடியே 99 லட்சத்து 27 ஆயிரத்து 705 ரூபாய் வழங் கப்பட்டது.

                தற்போது 2010  பிப்ரவரி-மார்ச் மாதங் களுக்கு மாநில நிதிக்குழு மானியமாக  மாவட்ட ஊராட்சிக்கு ஒரு கோடியே 51 லட்சத்து 71 ஆயிரத்து 400 ரூபாயும், 13 ஒன்றியங்களுக்கு ஐந்து கோடியே 30 லட்சத்து 91 ஆயிரத்து 366 ரூபாயும், கிராம ஊராட்சிகளுக்கு ஒன்பது கோடியே 21 லட்சத்து 61 ஆயிரத்து 614 ரூபாய் என மொத்தம் 16  கோடியே நான்கு லட்சத்து 23 ஆயிரத்து 884 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சியை பொறுத்தவரை மேற் கண்ட தொகையிலிருந்து  ஊராட்சி நிர்வாக செலவிற்கு ஊராட்சி நிதி கணக்கு எண் 1-க்கு 8 கோடியே 35 லட்சத்து 37 ஆயிரத்து 614 ரூபாயும், மின் கட்டணம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு குடிநீர் கட்டணம் செலுத்துதல் போன்ற செலவிற்காக,  ராட்சி நிதி கணக்கு 2-க்கு 86 லட்சத்து 23 ஆயிரத்து 504 ரூபாய் பிரித்து வழங்கப் பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி, ஒன் றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் தங்கள் பகுதிகளின் அடிப்படை வசதிகளை மேற்கண்ட நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு நிறைவேற்றிட அறிவுறுத் தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior