உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

கொசு வலை கட்டும் பணி துவக்கம்

நெல்லிக்குப்பம்:

                நெல்லிக்குப்பத்தில் கொசு உற்பத்தியை தடுக்க செப்டிக் டேங்க் காற்றுப் போக்கி குழாயில் வலை கட்டப்பட்டது. நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதை கட்டுப் படுத்த நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மருந் துகளால் கொசுவை ஒழிக்க முடியாது. கொசு உற்பத்தியை தடுப்பதன் மூலமே கொசு தொல்லையை குறைக்க முடியும். செப்டிக் டேங்க் பைப்பில் வலை கட்டுவதன் மூலம், தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுத்தாலே 75 சதவீத கொசு உற்பத்தியை தடுக்க முடியும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர். அதைத்தொடர்ந்து நகராட்சி பகுதியில் உள்ள செப்டிக் டேங்க் காற்றுப் போக்கி குழாயில் துப்புரவு பணியாளர்கள் நகராட்சி செலவில் வலையை கட்டி வருகின்றனர். இப்பணியை சேர்மன் கெய்க் வாட்பாபு, கமிஷனர் உமாமகேஸ்வரி, சுகாதார அலுவலர் கிருஷ்ணகுமார் பார்வையிட்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior