உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

செங்குளம் ஏரி ஆக்கிரமிப்பால் சீரமைப்பு பணி...நிறுத்தம்!: 600 ஏக்கர் விளை நிலம் பாதிக்கும் அபாயம்


கடலூர்: 

                    விருத்தாசலம் அருகே 19.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் படிந்துள்ள என்.எல்.சி., சுரங்க மண்ணை தூர் வார 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக் கீடு செய்தும் ஆக்கிரமிப் பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளதால் மராமத்து பணி பாதியிலேயே நிறுத்தப் பட்டுள்ளது. விருத்தாசலம் அடுத்த சேப்ளாநத்தம் வடக்கு கிராமத்தில் 19.5 ஏக்கர் பரப்பளவில் செங்குளம் பாசன ஏரி உள்ளது.

                    இந்த ஏரியில் தேங்கும் என். எல்.சி., உபரி நீரை கொண்டு சேப்ளாநத்தம் வடக்கு, தெற்கு, உய்யகொண்டராவி, கோட்டகம், கீழ்பாதி, குறவன் குப் பம், சீராங்குப்பம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 600 ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வந்தன. இந்த ஏரியில் 10 ஏக்கர் வரை சிலர் ஆக்கிரமித்து பயிரிட்டு வருகின்றனர். மேலும் எஞ்சிய பகுதியில் சுரங்க மண் கொட்டப் பட்டது. இதனால் ஏரியில் நீரை தேக்கி வைக்க முடியாததால் கடந்த மூன் றாண்டாக இப்பகுதி விளை நிலங்களில் மகசூல் பாதித்தது. பல்வேறு புகார்களுக்கு பிறகு நில அளவையர்கள் மூலம் ஏரியை  அளந்து ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டது. ஏரியை சீரமைக்க என்.எல்.சி., நிர்வாகம் 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு  செய்தது.  அதனைத் தொடர்ந்து என்.எல்.சி., நிர்வாகமே டெண்டர் விட்டு ஏரியை தூர் வாரி சீரமைக்கும் பணியை  கடந்தாண்டு  துவங்கியது.   ஆனால் நில அளவையர்கள் அளந்து நட்ட ஏரி எல்லை கற்களை ஆக்கிரமிப்பாளர்கள் பிடுங்கி எரிந்துவிட்டு மீண்டும் ஏரியை ஆக்கிரமித்தனர். இதனால் ஏரி தூர் வாரும் பணி பாதியில் நிறுத்தப் பட்டது. 
                       தூர் வாரிய  மண்ணை ஏரியின் வடபுரத்தில் பெரிய அணையாக போட் டுள்ளதால் மழைக் காலங் களில் வடிகால் வசதியின்றி விளைநிலங்கள் மூழ்கும் நிலை உள்ளது. மேலும் மண்ணை தூர் வாரும் பணிக்காக நீரை தேக்கி வைப்பதற்காக ஏரியின் கீழ்புறம் உள்ள கலுங்கு (மதகு) உடைக் கப்பட்டதால் ஏரியில் நீர் தேக்க வாய்ப்பில்லாமல் உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் என்.எல்.சி., நிர் வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள 660 ஏக்கர் நிலத்தில் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட் டுள்ளது. நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என  அரசு அறிவித்து வருகிறது. ஆனால் அதனை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் ஏனோ கண்டும், காணாமல்  இருப்பது வேதனையாக உள்ளது. 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior