கிள்ளை:
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட திட்ட அலுவலர் ஆய்வு செய்தார். பரங்கிப்பேட்டை ஒன்றியம் மடுவங்கரையில் பாரத பிரதமர் கிராம சாலை திட்டத்தில் 80 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் சாலை, நக்கரவந்தன்குடி ஊராட்சியில் நடக்கும் பல்வேறு பணிகளை மாவட்ட திட்ட அலுவலர் ராஜஸ்ரீ ஆய்வு செய்து, பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார். அப்போது சேர்மன் முத்துபெருமாள், துணை சேர்மன் முடிவண்ணன், பி.டி.ஓ.,க்கள் சுப்ரமணியன், சுலோச்சனா, ஊராட்சி தலைவர்கள் சண்முகசுந்தரி, குலசேகர், துணைத் தலைவர்கள் முத்துக்குமாரசாமி, ராதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக