உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

சிறுபாக்கம் மானாவாரி நிலத்தில் விவசாயிகள் ஓமம் பயிர் சாகுபடி


சிறுபாக்கம்: 

                       சிறுபாக்கம் பகுதி மானாவாரி நிலங் களில் பயிரிடப்பட்டுள்ள ஓமம் பயிர் நல்ல மகசூல் கிடைக்குமா என எதிர் பார்த்துள்ளனர். சிறுபாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள மங்களூர், மலையனூர், வள்ளிமதுரம், எஸ்.நரையூர் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்களின் மானாவாரி நிலங்களில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் சாரல் மற்றும் பனிப்பொழிவினை நம்பி மல்லி, சூரியகாந்தி பயிர்களை விளைவிப்பது வழக்கம். நடப்பு ஆண்டில் சிறுபாக் கத்தை சேர்ந்த விவசாயி மணிகண்டன், வள்ளிமதுரம் கிராம விவசாயி பெருமாள் இருவரும் மலை பிரதேசங்களில் வளரும் பயிரான ஓமம் பயிரினை தலா ஒரு எக்டேரில் விளைவித்தனர். இப்பயிர் அண்மைகாலமாக பெய்து வந்த பனிப் பொழிவினை கொண்டு பச்சைப்பசேலென  பூத்து குலுங்கி வருகின்றது. கடந்த சில தினங்களாக நள்ளிரவில் அதிகளவு பனிபொழிவதால் நல்ல விளைச்சல் கண்டுள்ள ஓமம் பயிரினை சிறுபாக்கம் பகுதிகளை சேர்ந்த மானவாரி விவசாயிகள் மற்றும் வெளி மாவட்டங் களை சேர்ந்த விவசாயிகள் தினசரி வந்து  பார்வையிட்டு செல்கின்றனர். மகசூல் எவ்வளவு தரும் என்பதையும் விவசாயிகள் அதிகளவு எதிர்பார்த்து காத்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior