உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

மனநிலை பாதித்தவருக்கு உதவித்தொகை கலெக்டர் உத்தரவிட்டும் கிடைக்கவில்லை

கடலூர்:

                    கலெக்டர் உத்தரவிட்டு மூன்று ஆண்டுகளாகியும் உதவித்தொகை வழங்காமல் அதிகாரிகள் அலைகழித்து வருவதால், மன நலம் பாதித்த சகோதரனை இடுப்பில் சுமந்து வந்து குறைகேட்பு கூட்டத்தில் இளம் பெண் மனு கொடுத்தார். நெய்வேலி அடுத்த கீழக்குப்பத்தைச் சேர்ந்தவர் அசோகன் மகள் உமாமகேஸ்வரி(30). இவரது பெற்றோர்கள் இறந்துவிட்டனர். இவரது சகோதரர் ரமேஸ்வர்(27) மன நலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு உதவித்தொகை வழங்க கோரி 2007ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி அப்போதைய கலெக்டர் ராஜேந்திர ரத்னுவிடம் உமாமகேஸ்வரி மனு கொடுத்தார். அதனடிப்படையில் மனு பரிசீலனை செய்து ரமேஸ்வருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. பின்னர் அவரது மருத்துவ செலவிற்கு மாதம் 500 ரூபாய் உதவித்தொகை வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுவரை உதவித் தொகை வழங்கவில்லை. இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்திற்கு நேற்று சகோதரனை இடுப்பில் சுமந்தபடி வந்த உமாமகேஸ்வரி உதவித் தொகை கோரி மீண்டும் மனு கொடுத்தார்.

இது குறித்து உமா மகேஸ்வரி கூறியதாவது: 

                     தம்பி ரமேஸ்வர் மன நிலை பாதித்தவர். பெற் றோர்கள் இறந்துவிட்டதால் தம்பியை கவனிக்க வேறு யாரும் இல்லாதால் நானே கவனித்து வருகிறேன். இதனால் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது என் தம்பிக்கு மருத்துவச் செலவு மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆகிறது. வேறு வருமானம் இல்லாததால் என் குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வருகிறது என வேதனையுடன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior