உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 16, 2010

தேர்தல் முன்விரோதம்: கிராமத்தை விட்டு விரட்டப்பட்ட 15 குடும்பங்கள் எஸ்.பி.யிடம் புகார்

கடலூர்:
 
                      உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக, கிராமத்தை விட்டு விரட்டப்பட்ட 15 குடும்பங்கள், கடந்த 3 மாதங்களாக சொந்த கிராமத்துக்குள் நுழைய முடியாமல் தவிக்கிறார்கள். காட்டுமன்னார்கோவில் வட்டம் புத்தூர் போலீஸ் சரகம் கொத்தவாசல் கிராமத்தில் இரு கோஷ்டிகளிடையே உள்ளாட்சித் தேர்தல் மோதல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததது. பொங்கல் பண்டிகையின்போது இந்த முன் விரோதம் மீண்டும் வெளிப்பட்டது. பானை உடைத்தல் போட்டியில் வாய்த்தகராறு ஏற்பட்டு, மீண்டும் இரு கோஷ்டியினரும் மோதிக்கொண்டனர். விழா நடத்திய குடும்பத்தினர் மீது, எதிர் கோஷ்டியினர் தாக்குதல் நடத்தினர்.தாக்குதலுக்கு உள்ளான 15 குடும்பத்தினர் ஊரைவிட்டே விரட்டப்பட்டனர். இந்த குடும்பங்களில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சுமார் 30 பேர் உள்ளனர். அவர்களின் படிப்பு வீணாகிக் கொண்டு இருப்பதால், கடந்த வாரம் அவர்கள் மீண்டும் ஊருக்குத் திரும்பினர். அன்று இரவு அவர்கள் மீண்டும் தாக்கப்பட்டனர். வீடுகள் சூறையாடப்பட்டன. மீண்டும் ஊரைவிட்டு விரட்டப்பட்டனர்.இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் பயனில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அரசன் (50), மகாலிங்கம் (70), வீராசாமி (60), பன்னீர் (45), அரும்பு (60) மற்றும் அவர்களின் குழந்தைகள் திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீûஸ சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.  காவல் நிலையத்திலும் சேத்தியாத்தோப்பு துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மனு கொடுத்தும் பயனில்லை. உயிருக்குப் பயந்து ஊரைவிட்டு வெளியே இருக்கிறோம். பாதுகாப்பு அளிக்க வேண்டும். பிள்ளைகளின் படிப்புக்கு வகை செய்ய வேண்டும் என்றும் மனுவில் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior