கடலூர் :
மனைவியை எரித்து கொலை செய்த கணவருக்கு கடலூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(32). பூக்கடையில் வேலை செய்து வந்த இவரும், அதே பகுதியைச் சேர்ந்தவர் லோகலட்சுமி (எ) லோகநாயகி. இருவரும் 10 ஆண்டிற்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
ஆறுமுகம் தினமும் குடித்துவிட்டு லோகநாயகியிடம் தகராறு செய்து வந் தார். குடும்பச் செலவிற்கு பணம் கொடுப்பதில்லை. லோகநாயகி வீட்டு வேலை செய்து, குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் 2008ம் ஆண்டு அக். 7ம் தேதி பகல் 2 மணிக்கு ஆறுமுகம், சாப் பாடு கேட்டதற்கு லோகநாயகி "பணம் கொடுத்தால் தான் சாப்பாடு' என கூறினார். ஆத்திரமடைந்த ஆறுமுகம் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து லோகநாயகி மீது ஊற்றி தீவைத்தார். மேலும் அவர் வெளியே தப்பிச் செல்லாமல் இருக்க வீட்டின் வாயிலை அடைத் துக் கொண்டு நின்றார். அதில் தீயில் கருகிய லோகநாயகி புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர். அவர் மீது கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அசோகன், மனைவியை எரித்து கொலை செய்த ஆறுமுகத்திற்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக