கடலூர்:
மனநிலை பாதித்த பெண் பெற்ற குழந்தை சமுநலத்துறை மூலம் சேலம் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சேத்தியாதோப்பில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு மனநிலை பாதித்த பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின் னர் அந்த பெண் தனது குழந்தையை கவனிக்காமல், தெருக்களில் சுற்றித் திருந்தார்.
தகவலறிந்த சைல்டு லைன் அமைப்பினர் அந்த குழந்தையை மீட்டு, கடலூரில் உள்ள சமுக நலத் துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் சைல்டு லைன் அமைப்பின் நிர்வாகிகள் வக்கீல் அருளப்பன், சுஜாதா சீனுவாசன், பேராசிரியர் ஜெயந்திரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி புவனேஸ்வரியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. அந்த குழந்தையை, சமூக நல அலுவலர் சேலத்தைச் சேர்ந்த "லைப் லைன் டிரஸ்ட்' அமைப்பினரிடம் ஒப்படைத்தார். இதற்கான ஏற்பாடுகளை சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப் பாளர் ராஜசேகர் செய்திருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக