உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 06, 2010

பல்கலை மாணவர்கள் இறந்த சம்பவம் அரசின் முதற்கட்ட விசாரணை துவங்கியது

சிதம்பரம் : 

                      சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர்கள் நான்கு பேர் இறந்த சம்பவம் தொடர்பாக, தமிழக அரசு நியமித்த விசாரணை அதிகாரி நேற்று முதற்கட்ட விசாரணையை துவக்கினார். மாணவர்கள் தண்ணீரில் குதித்து இறந்த இடத்தை பார்வையிட்டு விசாரித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன்ஜினியரிங் படித்த ஜார்க்கண்ட் மாநில மாணவர் கவுதம்குமார், 28ம் தேதி விபத்தில் இறந்தார். பல்கலை மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை, போலீசார் விரட்டி அடித்தனர். அதில், பாலமான் வாய்க் காலில் குதித்த வெளி மாநில மாணவர்கள் சுமித்குமார், முகமது சர்பரேஸ் ராப், ஆஷிஷ் ரஞ்சன் குமார் ஆகியோர் இறந்தனர். வடக்கு மண்டல புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி., நாராயணசாமி, சிதம்பரத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். இந்நிலையில், நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க டலூர் டி.ஆர்.ஓ., நடராஜனை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.அதையொட்டி, நேற்று சிதம்பரம் வந்த விசாரணை அதிகாரியான நடராஜன், எஸ்.பி., கோவில் தெருவில் மாணவர் கவுதம்குமார் விபத்தில் சிக்கிய இடத்தை பார்வையிட்டார். பின்னர், மாணவர்கள் மறியலில் ஈடுபட்ட துணைவேந்தர் மாளிகை, மாணவர்களால் சேதப்படுத்தப்பட்ட தேர்வுத்துறை கட்டடம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டார்.போலீஸ் விரட்டி அடித்ததால் மாணவர்கள் தண்ணீரில் குதித்து இறந்த பாலமான் வாய்க்கால், மாணவர்கள் உடல் கிடைத்த இடத்தை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் விசாரித்தார். ஆர்.டி.ஓ., ராமராஜ், தாசில்தார் காமராஜிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்த பின், மதியம் கடலூர் புறப் பட்டு சென்றார். இன்று, துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் இருப்பதால், இரண்டாம் கட்ட விசாரணை நாளை துவங்கும் எனத் தெரிகிறது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior