கடலூர் :
இருதய நோயிற்கு நவீன கருவி மூலம் உயர் சிகிச்சை அளிப்பது குறித்த சிறப்பு கருத்தரங்கம் கடலூரில் நடந்தது.
மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் மற்றும் சென்னை போர்டிஸ் மலர் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இந்த சிறப்பு கருத்தரங்கம் கடலூர் கிருஷ்ணா மருத்துவமனையில் நடந்தது. இந்திய மருத்துவச் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, கோவிந்தராஜ், பார்த்தசாரதி, பிரசன்னா, பிரபாகரன், மகாலிங்கம் பங்கேற்றனர். கருத்தரங்கில இருதய நோயிற்கான உயர் சிகிச்சை குறித்து இருதய நோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் சந்திரசேகரன் "பவர் பாயின்ட்' மூலம் விளக்கம் அளித்தார். அப்போது அவர், இருதயத்தில் சீரற்ற நாடி துடிப்பை சீராக இருப்பதற்கு "ஐசிடி' எனும் நவீன கருவி பயன்படுத்தப்படுகிறது. ஒருவருக்கு நிமிடத்திற்கு 60 முதல் 80 வரை நாடி துடிப்பு இருக்க வேண்டும். இது 50க்கு கீழாகவோ அல்லது 100க்கு மேல் அதிகரித்தால் பிரச்னை ஏற்படுகிறது.
இவர்களுக்கு "ஐசிடி' கருவியை பொருத்தினால் இருதய வால்களுக்கு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி நாடி துடிப்பை சீராக்கும். இந்த சிகிச்சை தமிழகத்தில் ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது. சென்னை போர்டிஸ் மலர் மருத்துவமனையில் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது என பேசினார். கிருபானந்த் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக