உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

எனதிரிமங்கலம் மணல் குவாரியில் விதி மீறல்! நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம்

பண்ருட்டி :

                     பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி மணல் எடுப்பதால்  நீர்மட்டம் குறையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

                  பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் பெண்ணையாற்றில் கடந்த டிசம்பர் மாதம் பொதுப்பணித் துறை சார்பில் மணல் குவாரி துவக்கப்பட்டது. இங்கிருந்து தினமும் 400 லாரிகள் மணல் ஏற்றிச் சென்றன. இந்நிலையில்  புலவனூர் பெண்ணையாற்றில் இயங்கி வந்த மணல் குவாரி கடந்த 10ம் தேதி மூடப்பட்டது. இதனால் தற்போது எனதிரிமங்கலம் குவாரிக்கு வரும் லாரிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

             பெண்ணையாற்றின் மணல் கட்டட பணிக்கு நன்றாக உள்ளதால் எனதிரிமங்கலம் குவாரி மணலுக்கு கூடுதல் மவுசு ஏற்பட்டு குவாரியில் இருந்து சென்னை, கடலூர், கும்பகோணம்  ஆகிய பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குவாரியில் ஒரு யூனிட்டிற்கு அரசு நிர்ணயத்த 312 ரூபாய்க்கு பதிலாக ஆயிரம் வீதமும், ஒரு லாரிக்கு ஊராட்சி நிதிக்கு என நூறு ரூபாய் வசூல் செய்கின்றனர்.

                  ஆற்றில் நான்கு பொக் லைன்கள் மூலம் 30 அடி ஆழத்திற்கு மணல் அள் ளப்பட்டுள்ளது. மணல் தோண்டிய பகுதியில் சில இடங்களில் களிமண் வரதுவங்கியுள்ளது. மணல் அதிகமாக அள் ளுவதால் எனதிரிமங்கலம், பைத்தாம்பாடி, காவனூர், உளுத்தாம்பட்டு, அக்கடவல்லி, கொரத்தி, கரும்பூர், கள்ளிப்பட்டு உள்ளிட்ட 50 கிராமங்களில் 30 அடி ஆழத்தில் உள்ள விவசாய போர் வெல் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாய உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

                    குவாரியில் இரண்டு மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே மணல் எடுக்க வேண்டும். யூனிட்க்கு 312 ரூபாய் வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அரசு விதிமுறைகளை எதையும் பின்பற்றப்படவில்லை.  இந்த விதிமுறை மீறல்களை வருவாய், கனிம வளம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க அண் ணாகிராம ஒன்றிய தலைவர் தட்சணாமூர்த்தி கூறியதாவது : 

                   குவாரியில் 30 அடி ஆழத்திற்கு மணல் எடுப்பதால்  எனதிரிமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள 25 அடி முதல் 30ல் உள்ள விவசாய மோட்டார்கள் செயலிழந்து வருகின்றன. இதனால் 100  ஏக்கர் நிலம் வீணாகிறது. மோட்டார் பாசனத்தை நம்பி விவசாயிகள் கடும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. 30 அடிக்கு மணல் எடுத்ததால் தற் போது ஆற்றில் களிமண் தெரிகிறது. தொடர்ந்து எடுத்தால் செம்மண் பார் தான் இருக்கும். அதன்பின் மணல் இல்லாமல் நீர் மட்டம் வெகுவாக குறையும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior