உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

வெள்ளாற்றில் மணல் எடுக்க பெரம்பலூர் மாவட்ட மக்கள் எதிர்ப்பு

திட்டக்குடி :

               வெள்ளாற்றில் மணல் ஏற்ற சென்ற மாட்டு வண்டிகளை கிராம மக்கள் மறித்து திருப்பி அனுப்பினர்.

             திட்டக்குடி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்திற்கு இடையே வெள்ளாறு உள் ளது. ஆற்றில் கடந்த 92ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தரைப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரைகள் உடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத் தியது. இதனால் வெள்ளாற்றங்கரையில் அரசு மணல் குவாரிகளை அனுமதிக்க கூடாது என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

               எனவே கடலூர், பெரம்பலூர் மாவட்ட பொதுப்பணித்துறையினர், மண் அரிப்பு ஏற்படாத பகுதிகளில் மட்டுமே அரசு மணல் குவாரிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி திட்டக்குடி அடுத்த வதிஷ்டபுரம் வெள்ளாற்று பகுதியில் இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரியில் மணல் ஏற்றுவதற்காக நேற்று காலை 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் வந்தன. ரசீது பெற்ற மாட்டு வண்டிகள் அகரம்சீகூர் எல்லை பகுதியில் மணல் ஏற்ற சென்றன.

                இதனை அறிந்த பெரம்பலூர் மாவட்ட மக்கள் திரண்டு வந்து தரைப்பாலத்தில் மாட்டு வண்டிகளை மறித்தனர். மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பதோடு, மண் அரிப்பு ஏற்பட்டு கிராமத்தில் வெள்ளம் புகும் அபாயம் ஏற்படுமென எச்சரித்தனர். இதனால் மணல் ஏற்றாமலேயே மாட்டு வண்டிகள் திரும்பி சென்றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior