உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 15, 2010

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் அசத்தல்

சிதம்பரம் :

                  சிதம்பரத்தில் நடந்து வரும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியின் இரண் டாம் நாளான நேற்று மனவளர்ச்சி குன்றிய மாணவர்களின் பரத நாட்டியம், பார்வையாளர்களை கவர்ந்தது.

               சிதம்பரம் நடராஜர் கோவிலில் 29வது நாட்டியாஞ்சலி விழா நேற்று முன்தினம் துவங்கியது. மகா சிவராத்திரி என்பதால் அன்று மாலை 5.30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்து 22 நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. பார்வையாளர்களும் இறுதிவரை இருந்து ரசித்தனர்.

              இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று மாலை 5.40 மணிக்கு துவங்கியது. முதல் நிகழ்ச்சியாக, சிங்கபெருமாள் கோவில் விநாயக நாட்டியாலயா பள்ளி மாணவியர் பரதம் ஆடினர். தொடர்ந்து, சிதம்பரம் ஜி.வி., மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவ, மாணவிகள் பரதம் ஆடி பார்வையாளர்களை அசத்தினர். மும்பை ஐஸ்வர்யா வெங்கடேஷ், சென்னை கலைக்கோவில் மாணவியர், சென்னை தேஜஸ் நாட்டிய பள்ளி மாணவியர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது.

                   சென்னை ராதிகா சுரஜித் மாணவியரின், ஆடல் கண்ணீரோ எனும் பரதநாட்டியம், அசாம் மாநில ஜீவன் ஜித் தத்தா குழுவினரின் சத்திரியா நடனம் ஆகியவற்றை பார்வையாளர்கள் பாராட்டினர்.  அனிதா ரத்னம் - ரேவதி சங்கரன் குழுவினரின் நாட்டிய நாடகம், செகந்தராபாத் ராம நாடக நிகேதன் குழுவினர் மற்றும் நெரூர் நந்திதா, சென்னை ஸ்ரீ ஜெய அருணா பரதாலயா மாணவியர், திருச்சி ஜெயபாரதி ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நேற்றைய நிகழ்ச்சியில் எஸ்.பி., அஸ்வின் கோட்னிஸ், இந்தியன் வங்கி மண்டல முதுநிலை மேலாளர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior