கடலூர்:
நியாய விலைக் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ கோதுமை வழங்கப்படும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.
ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நியாயவிலைக் கடைகளில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஒரு கார்டுக்கு ஒரு கிலோ ரூ. 11 வீதம், 2 கிலோ வரை வழங்கப்படும். கோதுமை ஒரு கிலோ ரூ. 7.50 வீதம் பெறலாம். ரேஷன் கார்டு ஒன்றுக்கு 10 கிலோ வரை கோதுமை வழங்கப்படும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
downlaod this page as pdf