கடலூர் :
நெய்வேலியில் சிக்கிய கள்ள நோட்டு கும்பல் குறித்த விசாரணை சி.பி. சி.ஐ.டி., பிரிவிற்கு மாற்ற பரிந்துரை செய்யப்படும் என எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார்.
இது குறித்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது:
நெய்வேலி வேலுடையான் பட்டு பகுதியில் கள்ள நோட்டுகளை புழகத்தில் விடமுயற்சித்து வருவதாக கிடைத்த தகவலில் பேரில் சேலம் ராஜன், வடலூர் சிவமணியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 4.56 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப் பட்டுள்ளது.இந்த சம்பவத்தில் கேரளா உள்ளிட்ட சில மாநிலத்தை சேர்ந்தவர்களின் தொடர்பு இருக்கும் என தெரிய வந்துள்ளதால், மேல் விசாரணைக்காக இந்த வழக்கை சி.பி.சி. ஐ.டி., க்கு மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்படும்.
மேலும் இது போன்ற பெரியளவில் குற்றம் செய்பவர்கள் ஒன்றுக்கு மேற் பட்ட மாநிலத்தவர்கள் தொடர்பிருந்தால் மத்திய உள்ளதுறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி புதிதாக அமைக்கப்பட் டுள்ள தேசிய புலனாய்வு பிரிவிற்கு வழக்கு குறித்த தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது. கடலூரை அடுத்த நல்லாத்தூரில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து குற்றவாளிகள் யார் என அடையாளம் காணப் பட்டுள்ளது. கொள் ளைக்கு பயன்படுத்திய சுமோ காரை சிறப்பு படை போலீசார் கைப்பற்றியுள்ளனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
4.500 ரூபாய் கள்ள நோட்டுகள் கத்தை கத்தையாக பறிமுதல் நெய்வேலியில் இருவர் கைது
நெய்வேலி :
நெய்வேலியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய் தனர். அவர்களிடமிருந்து கத்தைக் கத்தையாக கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய் தனர். கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலை கண்டுபிடிக்க தனிப் படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று காலை 8.45 மணிக்கு வேலுடையான்பட்டு கோவில் தற்காலிக பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சிவமணி (26) என்பவரை போலீசார் விசாரித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில் 338 எண்ணிக்கை உள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில், கேரள மாநிலம் கொல்லம் ராஜன் (38), மதுரை முரளி (எ) முருகேசன் (36), திருச்சி சுந்தர் (36) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. சிவமணி கொடுத்த தகவலின் பேரில், வடலூர் சபை அருகே பதுங்கி இருந்த ராஜன் என்பவரை போலீசார் கைது செய்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து 57 எண்ணிக்கையுள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளை கைப்பற்றினர். இரண்டு பேரிடமிருந்து மட்டும் 4.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் கைப்பற்றினர். சிவமணி மற்றும் ராஜன் கொடுத்த தகவலின் பேரில் முரளி (எ) முருகேசன் மற்றும் சுந்தர் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
downlaod this page as pdf