உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

கட​லூர் மாவட்​டத்​தில் ஆறு,​​ ஏரி​களை தூர்​வார கோரிக்கை

 ​சிதம்​ப​ரம்:

                     கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள ஆறு,​​ ஏரி​களை தூர்​வாரி ஆழப்​ப​டுத்த வேண்​டும் என காட்​டு​மன்​னார்​கோவி​லில் நடை​பெற்ற தமிழ்​நாடு விவ​சாய சங்க 10-வது மாவட்ட மாநாட்​டில் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டுள்​ளது.​ மாவட்டத் தலை​வர் கே.எஸ்.செல்​வ​ராசு தலைமை வகித்​தார்.​ விவ​சாய சங்க வேலை அறிக்​கையை மாவட்​டச் செய​லா​ளர் எம்.ஜி.ராமச்​சந்​தி​ரன் படித்​தார்.​ தமிழ்​நாடு விவ​சாய சங்க மாநி​லக் குழு உறுப்​பி​னர் பி.எஸ்.மாசி​லா​மணி சிறப்புரை​யாற்​றி​னார்.​

                 இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி மாவட்​டச் செய​லா​ளர் டி.மணி​வா​ச​கம்,​​ மாநிலக்​குழு உறுப்​பி​னர் ஏ.பி.நாக​ரா​ஜன்,​​ மாவட்ட செயற்​குழு உறுப்​பி​னர் ஆர்.சுப்​பி​ர​ம​ணி​யன் உள்​ளிட்​டோர் பங்​கேற்று வாழ்த்​து​ரை​யாற்​றி​னர்.​ மாநாட்டில் புதிய மாவட்​டக்​குழு உறுப்​பி​னர்​கள் 23 பேர் தேர்வு செய்​யப்​பட்​ட​னர்.​ அதன் பின்​னர் தலை​வர் மற்​றும் நிர்​வா​கி​கள் தேர்​தல் நடை​பெற்​றது.​ 

தேர்வு செய்​யப்​பட்ட புதிய நிர்​வா​கி​கள்:​ 

             மாவட்​டத் தலை​வர்-​ ரங்​க​சாமி ​ சிறப்​புத்​த​லை​வர்-​ எம்.ஜி.ராமச்​சந்​தி​ரன் ​ செய​லா​ளர்-​வி.எம்.சேகர் ​ பொரு​ளா​ளர்-​ எஸ்.பி.கோவிந்​த​சாமி.​

தீர் ​மா​னங்​கள்:​​ 

                       விவ​சா​யி​க​ளின் உற்​பத்​திச் செலவு பல மடங்கு உயர்ந்​துள்​ள​தால் நெல் குவிண்​டால் ஒன்​றுக்கு ரூ.1500-ம்,​​ கரும்பு டன் ஒன்​றுக்கு ரூ.2500-ம் என அரசு விலை நிர்​ண​யம் செய்ய வேண்​டும்.​ கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள விவசாய நீர் ஆதா​ரத்தை பெருக்க வெலிங்​டன் ஏரி,​​ வீரா​ணம் ஏரி,​​ நாரைக்​கால் ஏரி,​​ பெரு​மாள் ஏரி உள்​ளிட்ட ஏரி​கள் மற்​றும் ஆறு​களை தூர்​வாரி ஆழப்​ப​டுத்த வேண்​டும்.​ மேலும் ஆறு​க​ளின் குறுக்கே தடுப்​ப​ணை​கள் அமைக்க வேண்​டும்.​ விவ​சா​யத்​துக்கு 24 மணி நேர​மும் தடை​யில்லா மின்​சா​ரம் வழங்க வேண்​டும்.​ விலை நிலங்​கள் ரியல் எஸ்​டேட்​க​ளாக மாற்​று​வதை தடை செய்​திட வேண்டும்.​ அரசு நெல் கொள்​மு​தல் நிலை​யங்​க​ளில் நடை​பெ​றும் மோச​டியை தடுத்து நிறுத்த வேண்​டும்.​ பரங்​கிப்​பேட்டை பகு​தி​யில் தனி​யார் மின் நிறு​வ​னத்​துக்கு குறைந்த விலைக்கு நிலம் வாங்கி அதிக விலைக்கு விற்​பனை செய்து மோசடி செய்​த​வர்​கள் மீது நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior