உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

பெண்ணாடம் மேம்பாலம் மாற்றுப் பாதையில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை


திட்டக்குடி : 

                 பெண்ணாடம் மேம்பாலம் கட்டுமான பணிக்காக அமைக்கப்படும் மாற்றுப் பாதையில் ஆலைகளின் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என கோட்டப்பொறியாளர் தெரிவித்தார்.

                   கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட் டில் 18 கோடி மதிப் பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கி, நடந்து வருகின்றது. இப்பணியினை கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மேம்பால கட்டுமான பணிகளின் (திட்டம்) கோட்ட பொறியாளர் செல்வம் நேற்று காலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மேம்பால கட்டுமான பணிகளின் (திட்டம்) கோட்ட பொறியாளர் செல்வம்   கூறியதாவது: 

           கடலூர் ரயில்வே கேட் அருகில் 7.8 கோடி ரூபாயில் சுரங்கப் பாதை, பச்சையாங்குப்பத்தில் 9.8 கோடியில் மேம்பாலம், விருத்தாசலத்தில் ஜங்ஷன் சாலையில் 14 கோடியிலும், உளுந்தூர்பேட்டை சாலையில் 24 கோடியிலும் மேம்பாலம், உளுந்தூர் பேட்டை ரயில்வே கேட்டில் 21 கோடியிலும், திண்டிவனத்தில் 7.8 கோடியிலும், முட்டம் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி 49 கோடி என மொத்தமாக 151.4 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு வருகிறேன்.

                    பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட் மேம்பாலம் ஆயிரத்து 79 மீட்டர் தூரத்தில் பொன்னேரி தோமையார் சர்ச் முதல் இறையூர் மத்திய கூட்டுறவு வங்கி வரை அமைய உள்ளது. மாட்டு வண்டிகள் செல்வதற்காக பிரத்யே கமாக சாலை அமைக்கப்பட மாட்டாது. ரயில்வே கேட்டின் நான்கு புறமும் சர்வீஸ் ரோடு அமைக்கப்படும். வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறி, இறங்கி செல்ல முடியுமே தவிர ரயில்வே கேட்டை கடக்க முடியாது. வாகனங்கள் எளிதாக செல்லும் வசதியுடன் மேம்பாலம் அமைக் கப்படும்.இப்பணிகளுக்காக ஒரு மாதத்திற்குள் விருத்தாசலம் - தொழுதூர் நெடுஞ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். பாலத்திற்கு அருகாமையில் ஒரு தற்காலிக சாலையும், கிராமப்புறங்களின் வழியாக ஒரு சாலை என ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இவ்வழியாக சிமெண்ட் ஆலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. பணிகளின் விபரம் குறித்து கட்டுமான நிர்வாகம் உடனடியாக போர்டு வைத்திட உத்தரவிட் டுள்ளேன். இவ்வாறு தெரிவித்தார்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior