உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

பண்ருட்டியில் போலீசாரை கண்டித்து போராட்டம்: இலவச 'டிவி' யை ரோட்டில் உடைத்ததால் பரபரப்பு


பண்ருட்டி:

                 பண்ருட்டி அடுத்த அண்ணா கிராமத்தில் போலீசாரைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் இலவச கலர், 'டிவி' யை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு ஊராட்சியில், இலவச 'டிவி' வழங்காததை கண்டித்து, கடந்த டிச.,  அண்ணா கிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கிராம மக்கள் மறியல் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட  37  பேர் மீது இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொண்டார். 

                    இதைக் கண்டித்து நேற்று காலை 10 மணிக்கு அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், கீழ்கவரப்பட்டு ஊராட்சியை சேர்ந்த இந்திய கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் சிவகுமார், ம.தி.மு.க., மாவட்ட துணை செயலர் ஜெய்சங் கர், ஆசைதாமஸ், சச்சிதானந்தம் உள்ளிட்ட 50 பேர், இலவச, 'டிவி' யை திரும்ப ஒப்படைக்கும் போராட் டத்தில் ஈடுபட்டு, 30 'டிவி'க்களை எடுத்து வந்தனர். போராட்டத்தின் போது  சச்சிதானந்தம், ஆசைதம்பி ஆகிய இருவரும், அரசு வழங்கிய 'டிவி' யை ரோட்டில் போட்டு உடைத்தனர்.  டி.எஸ்.பி., பிரசன்னகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த டிசம்பரில் நடந்த சாலை மறியலின்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்த பின் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப் பதிந்தது தவறு. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

                 இதனால் போலீசாருக்கும் - போராட்ட குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் டி.எஸ்.பி., முன்னிலையில் இன்னொரு 'டிவி' யை  உடைத் தனர்.    இதனால்  ஏற்பட்ட பதட்டம் காரணமாக போலீசார் குவிக்கப் பட்டு அனுமதியின்றி போராட்டம்  நடத்திய ஏழு பெண்கள் உள்ளிட்ட 45 பேரை   கைது செய்தனர்.

மாணவர்கள் பாதிப்பு: 

                     இலவச  'டிவி' யை  திரும்ப  ஒப்படைக்கும் போராட்டத்தின் போது தொடர்ந்து கோஷம் எழுப்பியதால், அருகில் இருந்த ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., கணித தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior