உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

கடலூர் மருந்துக்கடைகளில் ஆய்வாளர் திடீர் ஆய்வு


கடலூர் : 

                 கடலூர் பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில்  ஆய்வாளர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மொத்த மருந்து வியாபாரம் செய்து வரும் செல்வவிநாயகர் ஏஜென்சியில் கடந்த 17ம் தேதி மருந்து கட்டுப் பாட்டு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், போலியாக தயார் செய்த 'பெனட்ரில் சிரப்' (இருமல் மருந்து) இருந்ததை  கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கடலூர் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் பகுதிகளில் மருந்துக்கடைகளில்  மருந்து ஆய்வாளர் குருபாரதி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

                பின்னர் ஆய்வாளர் குருபாரதி கூறியதாவது: சென்னையில் போலி 'கார்டியாஸ்' மாத்திரை, 'ரினிவல்' கேப்சூல்ஸ் இருப் பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து போலி மாத்திரைகள், காலாவதியான மருந்துகள் உள்ளதா என கடலூர் பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் எனது தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோருடன் ஆய்வு செய்து வருகிறோம். அதில் இருமல் சிரப் மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு பரிசோதனைக்கு அனுப்பட் டுள்ளது என்றார்.


downlaod this page as pdf

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior