கடலூர்:
கடலூரில் இளநீர் விலை மீண்டும் 15 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோடை காலம் வந்து விட்டாலே இளநீருக்கு கிராக்கி அதிகம். விவசாயிகளிடம் இளநீர் ஒன்று 2.50க்கு கொள்முதல் செய்து கடலூரில் அதிகபட்சமாக 8 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தனர். ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் 8 ரூபாயாக விற்பனை செய்த இளநீர் 10 ரூபாயாக உயர்ந்தது. கடலூர் மைதானத்தில் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு நடந்ததால் வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். இவர்கள் மைதானத்தில் உடற்பயிற்சி செய்துவிட்டு கலெக்டர் அலுவலக சாலையில் இளநீர் குடித்து இளைப் பாறினர். இதனால் கலெக்டர் அலுவலக சாலையை ஆக்கிரமித்து வைத்திருக்கும் இளநீர் கடையில் வியாபாரம் சூடுபிடித்தது. அதே வேகத்தில் திடுதிப்பென இளநீர் விலை 15 ரூபாயாக உயர்ந்தது. தற்போது இளநீர் ஒன்று 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய