கடலூர்:
'கான்கிரீட்' வீட்டு வசதித் திட்டம் கணக்கெடுப்பு பணியால் (கே.வி.டி) தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் போலி பெயர் பட்டியல் பதிவு அதிகரித்து வருகிறது.
மத்திய அரசின் வேலை உறுதித் திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுகிறது. காலை 7 மணியிலிருந்து மாலை 4 வரை பணி செய்ய வேண்டும். இடையில் மதிய உணவுக்காக ஒரு மணி நேரம் விடப்படும். லோக்சபா தேர்தலுக்குப் பின் இந்த வேலை நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு கூலியும் 80லிருந்து 100 ரூபாயாக உயர்த்தப்பட்டது. காலை 7 மணிக்கு துவங்குகிற பணி காலை 8 மணிக்குள் வருகைப் பதிவேடு எடுக்கப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு பெயர் பட்டியல் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் வேலை செய் யும் மொத்த நபர்களை மாவட்ட வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்து விடுவர். ஆனால் தற்போது கோடை காலமாக இருப்பதால் பெரும்பாலான ஒன்றியங்களில் காலை 9 மணிக்கு பணி துவங்கி மதியம் 2 மணி வரை நடக்கிறது. அதனால் 10.30 மணிக் குமேல் அலுவலகத்திற்கு வருகை பட்டியல் அளிக் கப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் நலப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை பதிவு கொடுக்காமல் 'சிக் னல்' கிடைக்கவில்லை என கூறி மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்து விடுகின்றனர். தற்போது 'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தில் குடிசைகள் கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில்தான் குடிசைகள் அதிகம் இருப்பதால் கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நலப் பணியாளர்கள் 'கான்கிரீட்' வீட்டு வசதித் திட்ட கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால் கிராமங்களில் நூறு நாள் வேலை திட்டம் நடைபெறும் இடங்களுக்கு அவர்கள் செல்வதில்லை. அதிகாரிகள் அங்கு பணி செய்பவர்களிடமே எவ்வளவு பேர் வேலைக்கு வந்தனர் என வருகை பதிவு பெற்றுக் கொள்கின்றனர். இந்த வருகை பதிவை பொறுப்பற்றவர்கள் கவனித்து வருவதால் தமது இஷ்டம் போல் வேலை செய்யும் தொழிலாளர்கள் எண்ணிக்கையை கூடுதலாக்கி போலி பட்டியல் தயார் செய்து கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த சிறு விடுப்பு...:
ஊராட்சி பணியாளர்களை 'கான்கிரீட்' வீடு கட்டும் திட்டத்தில் ஈடுபடுத்துவதை ஊரக வளர்ச் சித்துறை அலுவலர் சங்கம் கண்டித்துள்ளது. இத்திட்டத்திற்காக தனியாக அதிகாரிகள், ஊழியர்கள் நியமித்து குடிசைகள் கணக்கெடுப்பு பணிகளை நடத்த வேண்டும் என ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒட்டு மொத்த சிறுவிடுப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நூறு நாள் வேலை திட்டத்தில் போலி பெயர் பட்டியல் தயார் செய்து கொடுத்ததால் பல ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து துணைத் தலைவர் மூலம் கலெக்டருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நலப் பணியாளர்கள் 'கான்கிரீட்' வீட்டு வசதி திட்டத்தை கவனித்து வருவதால் மேலும் போலி பெயர் பட்டியல் கொடுக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக