சிதம்பரம்:
சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் சேர்மன் கீதா கலியமூர்த்தி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ரங்கநாதன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் குஞ்சுபாண்டியன் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், அண்ணாமலைநகர் பேரூராட்சி பகுதியில் வடிகால்களுக்கு சிலாப் அமைப்பது. பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற ஊரமைப்பு வளர்ச்சி நிதியில் 75 சதவீதம், பேரூராட்சி பொது நிதியில் 25 சதவீதம் மண் சாலை மற்றும் பிரதான சாலையில் தொடர்பு படுத்தும் சாலை மேம்படுத்துதல். கலுங்குமேடு பகுதியில் பள்ளி மற்றும் அடுக்குமாடி வீடுகள் கட்ட அனுமதிப்பது. கட்டட உரிமம் தொகையை உயர்த்தாமல் பழைய கட் டணத்தை வசூலிப்பது. காலை 6 மணிமுதல் 9 மணி வரை நிறுத் தப்படும் மின் சாரத்தை 10 மணி முதல் 1 மணி வரை மாற்றி அமைக்க மின் துறைக்கு கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
பிடிஎப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக